For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீவிரவாதத்தை ஒழிக்க பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை : பாஜக வாக்குறுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto 2019: இந்த 4 அம்சங்கள்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது- வீடியோ

    பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை 'சங்கல்ப பத்ரா' என்ற பெயரில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

    நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 75 வாக்குறுதிகளுடன் மத்தியில் ஆளும் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    bjp manifesto 2019 : bjp promises we will strengthen the strike capability of the armed forces

    பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக தலைவர் அமித்ஷா, சுஷ்மா சுவராஜ் உள்பட முக்கிய தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய ராஜ்நாத் சிங், தீவிரவாதத்தை ஒழிக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றார். மேலும் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாஜக எடுக்கும் என்றார்.

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறுகையில், கடந்த 2014ம்ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், நாடு விரைவாக முன்னேறி வருகிறது. நாடு முழுவதும் பாஜக மின்சாரத்தை கொண்டு வந்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக வலுவான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது. இந்தியா வல்லரசாக உருவாகி வருகிறது. பிரதமர் மோடி தீவிரவாதத்தை கடுமையாக எதிர்த்தார்" இவ்வாறு கூறினார்.

    பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும்.. பாஜக அதிரடி அறிவிப்பு! பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக கொண்டு வரப்படும்.. பாஜக அதிரடி அறிவிப்பு!

    பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க பாரபட்சம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வாங்கப்பட்டு ராணுவம் வலிமைப்படுத்தப்படும். வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மக்கள் நுழையுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    bjp says We will strengthen the strike capability of the armed forces by equipping them with modern equipment
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X