For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் வரும் பின்னே.....மோடியின் 'திடீர்' ' திடீர்' பிரஸ் மீட் முன்னே!

பிரதமர் மோடியின் திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு, லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரும் என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபா தேர்தல் வரும் பின்னே.....மோடியின் திடீர் திடீர் பிரஸ் மீட் முன்னே!

    டெல்லி: பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்துவதற்கு மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி வருகிறார்.

    2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மிகப் பெரும் வெற்றியை பெற்று பிரதமரானார் மோடி. மத்தியில் ஆட்சியில் அமர்ந்தது முதல் பிரதமர் மோடியின் செய்தியாளர்கள் சந்திப்பு என்பது அபூர்வமான ஒன்றானதாகவே இருந்து வருகிறது.

    சட்டசபை தேர்தல் காலங்களில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி தருவதையும் மோடி வழக்கமாக வைத்திருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும்போது ஓரிரு வரிகள் மட்டுமே செய்தியாளர்களிடம் பேசிவிட்டு செல்வார் பிரதமர் மோடி. ஆனால் செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் வராது.

    திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு

    திடீர் செய்தியாளர்கள் சந்திப்பு

    மத்திய அரசு மீதான ஏராளமான விமர்சனங்கள், சர்ச்சைகள் இருந்தபோதும் பிரதமர் வெளிநாடு பயணங்களில்தான் கவனம் செலுத்துகிறார் என்பது பொதுவான குற்றச்சாட்டு. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

    செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் இல்லை

    செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் இல்லை

    இன்றும் நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென செய்தியாளர்களுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போதும் கூட பட்ஜெட் பற்றி பிரதமர் மோடிதான் பேசினாரே தவிர செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை.

    செல்வாக்கு சரிவால் முடிவு

    செல்வாக்கு சரிவால் முடிவு

    பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த கையோடு லோக்சபா தேர்தலை நடத்தலாம் என மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பாஜகவின் செல்வாக்கு படுவேகமாக சரிவதால் வேறுவழியே இல்லாமல் இப்போதே தேர்தலை நடத்தலாம் என்பதுதான் அக்கட்சியின் திட்டம்.

    தேர்தல் வர போகிறது?

    தேர்தல் வர போகிறது?

    இந்நிலையில் பிரதமர் மோடி திடீர் திடீரென செய்தியாளர்களை சந்திக்கத் தொடங்கி இருக்கிறார். அதாவது யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதைப் போல லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரப் போகிறது என்பதை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது பிரதமர் மோடியின் திடீர் செய்தியாளர் சந்திப்புகள்.

    English summary
    According to the sources the BJP is planning for early the Lok Sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X