For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருங்கள்.. அசாமில் விளம்பரம் செய்த பாஜக உறுப்பினர்.. கண்டுபிடித்த போலீஸ்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும்படி பாஜக உறுப்பினர் ஒருவர் அசாமில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி, பஞ்சாபில் நிலநடுக்கம் | இப்படியும் விளம்பரம் செய்கிறார்கள்- வீடியோ

    கவுகாத்தி: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேரும்படி பாஜக உறுப்பினர் ஒருவர் அசாமில் விளம்பரம் கொடுத்து இருக்கிறார். மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் அவர் இப்படி செய்துள்ளார்.

    கவுகாத்தி அருகே இருக்கும் நல்பாரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு இருக்கும் நிறைய கட்டிடங்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடிகளும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருங்கள் என்று விளம்பரம் செய்து இருக்கிறார்கள்.

    BJP member puts ISIS flag and poster in Assam, Police arrests

    அங்கு இருக்கும் முஸ்லீம் இயக்கங்கள் மீதுதான் போலீஸுக்கு முதலில் சந்தேகம் வந்துள்ளது. ஆனால் தீவிர விசாரணையின் முடிவில், போலீஸுக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்தும், போஸ்டர் ஒட்டியவர்களை பார்த்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் போலீஸ் 6 பேரை கைது செய்துள்ளது.

    இந்த திட்டத்தை முன்னின்று நடத்தியது தபான் பர்மான் என்று கூறப்படுகிறது. இவர் அந்த மாவட்டத்தின் பாஜக செயலாளர் ஆக இருக்கிறார். அதேபோல் சறுஜோதி பாய்ஜா என்று இன்னொரு பாஜக உறுப்பினரும் கைது செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களின் நண்பர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    இவர்கள் தாங்கள் போஸ்டர் ஒட்டியதை போலீசில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஏன் இப்படி செய்தார்கள் என்று கூறவில்லை. மக்களிடையே பிரச்சனையை உண்டாக்கி கலவரத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் அவர்கள் இப்படி செய்து இருக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் கூறியுள்ளது..

    English summary
    BJP member puts ISIS flag and poster in Assam, Police arrests. Police also arrested five more members in this issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X