For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்களுக்கு எதிராக குற்றம் செய்வதில் பாஜகவே முதலிடம்.. அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரம்!

பெண்களுக்கு எதிராக பாஜகதான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு புள்ளி விவரம் வெளியிட்டு இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: பெண்களுக்கு எதிராக பாஜகதான் அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுகிறது என்று ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தேர்தல் குறித்து ஆராயும் அமைப்பு புள்ளி விவரம் வெளியிட்டு இருக்கிறது.

ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் படிவம் கொடுக்கும் போது கட்சியினர் கொடுத்த தகவல்களை வைத்து இதை வெளியிட்டு இருக்கிறது . அதோடு பதவிக்கு வந்த பின் அவர்கள் செய்த குற்றச் செயல்களையும் ஆராய்ச்சி செய்துள்ளது.

இந்த வகையில் பாஜக கட்சி முதல் இடம் பிடித்துள்ளது. உன்னாவ், கத்துவா என்று வரிசையாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் பாஜக கட்சியினர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

எத்தனை பேர் ஆய்வு

எத்தனை பேர் ஆய்வு

இதன் தரவுகளை வைத்து மொத்தம் 4,845 அரசியல்வாதி விவரங்களை இந்த அமைப்பு சோதனை செய்து இருக்கிறது. இதில் 768 எம்பிக்கள், 4,077 எம்எல்ஏக்கள் பற்றிய விவரம் ஆய்வு செய்யப்பட்டது. சிலர் இதில் தவறான தகவல் கொடுத்ததாக கருதப்பட்டதால், அவர்களின் விவரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பாஜக முதல் இடம்

பாஜக முதல் இடம்

மொத்தமாக இந்தியா முழுக்க 1,580 எம்பிக்கள், எம்எல்ஏக்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதில் மொத்தமாக 45 பேர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை செய்து இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பாஜக கட்சியினர்தான் அதிக குற்றங்களை செய்துள்ளனர். மொத்தமாக 45 பேரில் 12 பேர் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள்.

என்ன மாதிரியான குற்றம்

என்ன மாதிரியான குற்றம்

பெண்களுக்கு எதிராக இவர்கள் நிறைய வன்முறை செயல்களை செய்து இருக்கிறார்கள். வன்புணர்வு செய்தல். கடத்தல், கொலை ஆகியவை இதில் அடக்கம். வீடியோ எடுத்து மிரட்டுதல், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை, வரதட்சணை, பாலியல் சீண்டல் என நிறைய புகார்களில் சிக்கி இருக்கிறார்கள்.

மற்றவை

மற்றவை

இந்த பட்டியலில் பாஜகவிற்கு நெருங்கிய அமைப்பாக திகழும் சிவ சேனா கட்சிதான் இரண்டாம் இடம் வகிக்கிறது. அதில் மொத்தம் 7 பேர் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்து உள்ளனர். மூன்றாவது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. 6 பேர் இந்த கட்சியில் குற்றம் செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியில் 4 பேர் இப்படி குற்றம் செய்துள்ளனர். இதில் தென்னிந்திய கட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

English summary
BJP members have highest crime rate against women according to the report by Association of Democratic Reforms (ADR). By this report, totally 48 members have a crime against women. In this 48, 12 belongs BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X