For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்கு "அரை டவுசர்" அணிந்து வந்த பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அனுமதி மறுப்பு

பாஜக எம்.எல்.ஏ. அரை டவுடர், பனியனுடன் சட்டசபைக்கு வந்த சம்பவம் பரபப்பை கிளப்பியுள்ளது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டப்பேரவை நிகழ்சிக்கு அரை டவுசர், பனியன் அணிந்து வந்த பாஜக எம்.எல்.ஏ.க்கு பேரவைக்குள் அனுமதி மறுக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். இந்த நிலையில் பீகார் மாநிலம் பேட்டியாவிலிருந்து மனுவாப்புல் வரை 44 கி.மீ. சாலை அமைக்கும் திட்டத்தை முதல்வர் நிதீஷ்குமார் 2013-ம் ஆண்டு அறிவித்துள்ளார்.

bjp mla arrives at bihar assembly in shorts and vest denied entry

ஆனால், இதுவரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து பீகார் சட்டப்பேரவைக்கு அரை டவுசர் மற்றும் பனியனுடன் வந்த மேற்கு சம்பாரண் மாவட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. வினய் பிஹாரிக்கு பேரவைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பேரவைக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படாததால், பேரவை வளாகத்தில் அமர்ந்து அவர் போராட்டம் நடத்தினார். அப்போது, பேட்டியா-மனுவாப்புல் சாலை அமைக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் வரையில் பேரவைக்கு அரைக்கால் டவுடர் மற்றும் பனியனுடன் தான் வருவேன் என்று வினய் பிஹாரி கூறியுள்ளார்.

English summary
BJP MLA Binay Bihari arrived in Bihar Vidhan Sabha wearing vest&shorts to protest against delay in construction of road in his assembly area
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X