For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு கேட்ட என்சிபி பெண் தலைவரை காலால் எட்டி உதைத்த பாஜக எம்எல்ஏ-வீடியோ வைரல்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்கக் கோரி போராட்டம் நடத்திய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெண் தலைவரை பாஜக எம்எல்ஏ பால்ராம் தவானி கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருவதால் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு கோரியும் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக் கோரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

BJP MLA Balram Thavani attacks NCP woman leader

அப்போது எம்எல்ஏ தவானியிடம் மனு கொடுக்க நீத்து அவரது அலுவலகத்துக்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ தவானி அந்த பெண்ணை அலுவலகத்திலிருந்து வெளியே தரதரவென இழுத்து வந்தார். பின்னர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினார். அவருடன் இருந்த மற்றொரு நபரும் நீத்துவை அடித்தனர்.

இதுகுறித்து நீத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்கக் கோரி பால்ராமின் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது என்னிடம் எதையும் சொல்லாமல் என்னை தரதரவென இழுத்து வெளியே தள்ளிய எம்எல்ஏ என்னை கடுமையாக தாக்கினார்.

பின்னர் என்னை காப்பாற்ற வந்த கணவரையும் அவரது ஆதரவாளர்கள் தாக்கினர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களையும் பால்ராமும் அவரது ஆதரவாளர்களும் கடுமையாக தாக்கினர் என்றார்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ பால்ராம் தவானி கூறுகையில் அவர்களை அடிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. கோபத்தினால் நான் அவ்வாறு நடந்து கொண்டேனே. தவறை ஒப்புக் கொள்கிறேன். கடந்த 22 ஆண்டுகளாக நான் அரசியலில் இருக்கிறேன். இது வரை இது போன்ற ஒரு தவறு நடந்ததில்லை. நான் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் தவானி.

English summary
BJP MLA Balram Thavani attacks NCP woman leader or protesting over the issue of water scarcity in the area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X