For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.. பாஜக எம்எல்ஏவையே.. முட்டியளவு கழிவுநீரில் நடக்க வைத்த மக்கள்.. கட்டாயப்படுத்தி.. அதுவும் உபியில்

கழிவுநீரில்பாஜக எம்எல்ஏ நடக்கும் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது

Google Oneindia Tamil News

கான்பூர்: ஒரு பாஜக எம்எல்ஏவையே முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி நடக்க வைத்த அவலம் நடந்துள்ளது.. அதுவும் உத்தரபிரதேசத்தில்..!

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரப்போகிறது.. அடுத்த வருடம் நடக்க போகும் தேர்தலுக்கு இப்போதே அந்த மாநிலம் தயாராகி வருகிறது.. இந்த முறையும் உபியை விட்டுவிடக்கூடாது என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

அதனால், 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி பக்கமே இதுவரை போகாத எம்எல்ஏக்கள் எல்லாம் அவரவர் தொகுதிக்குள் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தயவு தாட்சணையே கூடாது தாட்சாயினிக்கு.. செஞ்ச வேலையை பாருங்க.. சிசிடிவி வீடியோ தயவு தாட்சணையே கூடாது தாட்சாயினிக்கு.. செஞ்ச வேலையை பாருங்க.. சிசிடிவி வீடியோ

 பாஜக எம்எல்ஏ

பாஜக எம்எல்ஏ

அப்படித்தான், மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்எல்ஏவான கமல் மாலிக், தன்னுடைய தொகுதிக்குள் நுழைந்துள்ளார்.. தேர்தலை முன்னிட்டு பாத யாத்திரையும் அங்கு மேற்கொண்டு வருகிறார்... அந்த வகையில், ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமத்தின் வழியாக பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தார்.

 கழிவுநீர்

கழிவுநீர்

அப்போது நீண்ட வருடம் கழித்து தங்கள் எம்எல்ஏவை பார்த்த அந்த தொகுதி மக்கள் எதுவுமே புகார் சொல்லவில்லை.. குறைகளையும் சொல்லவில்லை.. மனுக்களையும் நீட்டவில்லை.. காரணம், எம்எல்ஏ நடந்துவந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி கிடந்தது.. அதுவும் முட்டி அளவு தேங்கி கிடந்தது.. அந்த நீரில் இறங்கிதான், அவரால் தன்னுடைய பாதயாத்திரையை தொடங்க முடியும்.. வேறு பாதை கிடையாது..

 மாலிக்

மாலிக்

கழிவுநீரை பார்த்த எம்எல்ஏ அப்படியே திருதிருவென பார்த்து விழித்து நின்றார்.. மக்களோ, இந்த பகுதி பற்றி நீங்களே தெரிஞ்சுக்குங்க.. என்று சொல்லி கட்டாயப்படுத்தி மாலிக்கை, அந்த கழிவு நீரில் நடக்க வைத்துள்ளனர். இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. கிட்டத்தட்ட ஒரு நிமிட வீடியோ அது..

 இழுத்துட்டு வாங்க

இழுத்துட்டு வாங்க

வீடியோவில், "எம்எல்ஏவை தண்ணீரில் இழுத்துட்டு வாங்க.. ஏன்னா, எங்க எம்எல்ஏ இங்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை" என்று உள்ளூர்வாசிகளே பேசுவது அதில் பதிவாகி உள்ளது. மேலும், அந்த வீடியோவில் கிராமத்து தலைவரின் கணவரான ரவீந்திரகுமார் என்பவர், எம்எல்ஏ கமல் மாலிக்குடன் சென்று முட்டி அளவு கழிவு நீர் குறித்த நிலையை எம்எல்ஏவுக்கு சுட்டிக்காட்டுகிறார்...

நிலவரம்

நிலவரம்

இதுகுறித்து ரவீந்திரகுமார் சொன்னபோது, "எம்எல்ஏவே விரும்பிதான் கிராமத்தின் உண்மையான நிலவரத்தை அறிய கழிவுநீரில் நடந்தார்... எனக்கு ஆதரவு தருமாறு எம்எல்ஏவிடம் கேட்டேன், அப்போது தான் கிராமவாசிகளிடம் என்னால் பதில் சொல்ல முடியும் என அவரிடம் தெரிவித்தேன்" என்றார்.

வீடியோ

வீடியோ

அதேபோல, கழிவுநீரில் நடந்த எம்எல்ஏ இதை பற்றி சொல்லும்போது, கிராமத்தினரின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே அங்கு சென்று கழிவுநீரில் நடந்தேன்... அந்த வீடியோவை தவறான பார்வையில் எடுத்து தவறாக பயன்படுத்தி உள்ளனர்... அந்த பகுதியினை சீரமைக்கும் வகையில் இந்த விஷயத்தை உள்ளூர் நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்" என்றார்.

English summary
BJP MLA forced to walk in sewage water by villagers in Uttar pradesh, video
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X