For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி ரிசல்ட்டிற்கு இடையில் இப்படி ஒரு கூத்தா.. பாஜக எம்பிக்கள் மீது கோபத்தில் கட்சி தலைமை.. ஏன்?

நேற்று விப் நோட்டீஸ் அளிக்கப்பட்டும் கூட பாஜக எம்பிக்கள் பலர் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு வரவில்லை.

Google Oneindia Tamil News

Recommended Video

    The Unknown show with Anandhan Irfath | டெல்லி தேர்தலில் வரலாற்று சாதனை படைத்த ஆம் ஆத்மி

    டெல்லி: நேற்று விப் நோட்டீஸ் அளிக்கப்பட்டும் கூட பாஜக எம்பிக்கள் பலர் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவிற்கு வரவில்லை. பாஜக தலைமையை இந்த செயல் கோபப்படுத்தி இருக்கிறது.

    நேற்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. பாஜக 8 இடங்களில் வென்றது. இந்த தேர்தல் முடிவுகளுக்கு இடையில் நேற்று லோக்சபா, ராஜ்யசபாவில் முக்கியமான விஷயம் ஒன்று நடந்தது.

    நேற்று லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மத்திய பாஜக எம்பிக்கள் எல்லோரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பாஜக கொறடா சார்பாக விப் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    மத்திய பட்ஜெட் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுக்க இருக்கும் விளக்க உரையை முன்னிட்டுதான் இந்த விப் நோட்டீஸ் வழங்கப்பட்டது. நேற்று லோக்சபாவில் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதில் அளித்தார். அதன்பின் ராஜ்ய சபாவில் அவர் இதேபோல் பட்ஜெட் குறித்து விவாதம் செய்தார். இந்த விவாதத்தில் நிறைய சலசலப்புகள் நடக்க வாய்ப்பு இருந்ததால், அனைத்து பாஜக எம்பிக்களும் அவையில் இருக்க வேண்டும் என்று விப் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

    அவைக்கு வரவில்லை

    அவைக்கு வரவில்லை

    ஆனால் இந்த விப் நோட்டீஸ் இவ்வளவு முக்கியமான நேரத்தில் அளிக்கப்பட்டும் கூட நேற்று பாஜக எம்பிக்கள் பலர் அவைக்கு வரவில்லை. லோக்சபா, ராஜ்ய சபா என்று இரண்டுக்கும் பாஜக எம்பிக்கள் பலர் நேற்று வரவில்லை. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் பேசிய போது பாஜக எம்பிக்கள் பலர் அங்கு இடம்பெற்று இருக்கவில்லை. மூத்த எம்பிக்கள் சிலரும், அமைச்சர்களும் மட்டுமே இடம்பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன காரணம்

    என்ன காரணம்

    நேற்று பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கியமான மசோதா ஏதாவது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக சார்பாக அப்படி எதுவும் தாக்கல் செய்யும் எண்ணம் இப்போது இல்லை, என்று கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக தலைமை கூறியுள்ளது. இதனால் நேற்று மசோதா எதுவும் தாக்கல் செய்யப்படாது என்பது உறுதியானது. இதனால் பாஜக கொறடா அனுப்பிய விப் நோட்டீஸை கட்சியினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    மிக மோசம்

    மிக மோசம்

    மஸோதாதான் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லேயே என்று பாஜக எம்பிக்கள் பெரிதாக இந்த விப் நோட்டீஸ் மீது கவனம் செலுத்தவில்லை. இதனால் அவையில் நேற்று பாஜக எம்பிக்கள் பலர் ஆப்சென்ட். பாஜக தலைமையை இந்த செய்தி கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. டெல்லி தேர்தல் முடிவும், எம்பிக்களின் இந்த செயலும் கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நேற்று அவைக்கு வராமல், காரணமின்றி லீவ் எடுத்த நபர்களிடம் விளக்கம் கேட்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    கொறடா இது தொடர்பாக எம்பிகளிடம் விளக்கம் கேட்பார். நேற்று டெல்லி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதனால் டெல்லியின் பாஜக எம்பிக்கள் 7 பேரில் 5 பேர் அவைக்கு வரவில்லை. இவர்கள் தேர்தல் பணிகளை அங்கே கவனித்துக் கொண்டு இருந்தனர். இதனால் இவர்களிடம் பெரிதாக விளக்கம் எதுவும் கேட்கப்படாது. ஆனால் தேர்தல் பணிகளை கவனிக்காமல், அவையை புறக்கணித்த மற்ற எம்பிக்களிடம் கட்சி சார்பாக விளக்கம் கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Most of the BJP MPs; didn't care much about whip notice yesterday amidst Delhi Result.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X