
பாஜக சீனியரை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.. நட்டாவுக்கு வந்த கடுங்கோபம்.. மம்தா மீது பாய்ச்சல்
கொல்கத்தா: பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.. நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நட்டா கூறியுள்ளார்.
2010-ம் ஆண்டு முதல் தன் வசம் வைத்திருக்கிற கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து 3-வது முறையாக வென்று 'ஹாட்ரிக்' சாதனை படைக்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியது..
இந்த மாநகராட்சியை கைப்பற்றாவிட்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணியை பின்னுக்குத்தள்ளி 2-ம் இடத்தையாவது கைப்பற்றி விட வேண்டும் என்று பாஜகவும் கங்கணம் கட்டிக் கொண்டு போட்டியில் குதித்தது.
5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா பரபர ஆலோசனை!

கொல்கத்தா
கொல்கத்தாவில் மாநகராட்சிக்கான தேர்தலும் நடந்து முடிந்தது.. மொத்தமுள்ள 144 வார்டுகளிலும் 4,959 வாக்குச் சாவடிகளில் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி கடுமையான பாதுகாப்புடன் வாக்குப்பதிவும் நடந்தது.. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவியது.. இதனால் சில இடங்களில் தேர்தலின்போது வன்முறைகளும் வெடித்தது.

கலவரம்
குறிப்பாக, வடக்கு கொல்கத்தாவின் வார்டு 36ல் உள்ள டாக்கி ஆண்கள் பள்ளி வாக்குச் சாவடிக்கு வெளியே திடீரென வெடிகுண்டு வீசப்பட்டது.. இதில் வாக்காளர் ஒருவர் படுகாயமடைந்தார்... ஆங்காங்கே கொல்கத்தாவில் வன்முறை நடந்ததால், மீண்டும் கொல்கத்தா மாநகராட்சியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜகவை சேர்ந்த சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி வலியுறுத்தினார்..

நட்டா
அத்துடன், மாநகராட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்யவும் வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்... அப்போது அங்கிருந்த போலீசார், சுவேந்து அதிகாரியை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக சொல்லப்படுகிறது.. இதற்குதான் பாஜகவின் தேசிய தலைவர் நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்..

பாஜக தலைவர்
இதைபற்றி அவர் சொல்லும்போது, "மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்றிருந்தபோது, மம்தா பானர்ஜி போலீஸை வைத்து பாஜக சீனியர் தலைவரான சுவேந்து அதிகாரியை கையாண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. கொல்கத்தா மாநகராட்சி தேர்தலில் பரவலான தேர்தல் முறைகேடுகள் பற்றிய அறிக்கைகள் மற்றும் இப்போது நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு ஒருபோதும் நல்லதல்ல" என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.

பாஜக
முன்னதாக, இந்த தேர்தல் முடிந்ததுமே பாஜக தரப்பில் இன்னொரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.. பாஜக வேட்பாளர் ஒருவரது மனைவியை, அவரது 8 வயது மகள் முன்னிலையில் பலாத்காரம் செய்து கொலை செய்வோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு விஷமிகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேற்கு வங்காள பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் மாளவியா புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.