For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவில் ஒருநபர் ராஜ்ஜியம்தான்.. மோடி மீது ஜஸ்வந்த்சிங் தாக்கு

By Mathi
|

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் மோடி என்ற ஒற்றை மனிதரின் ராஜ்ஜியம்தான் நடந்து கொண்டிருக்கிறது என்று அக்கட்சியில் இருந்து 2வது முறையாக நீக்கப்பட்ட ஜஸ்வந்த்சிங் விமர்சித்துள்ளார்.

பாரதிய ஜனதாவின் வேட்பாளராக ராஜஸ்தானின் பால்மர் தொகுதியில் போட்டியிட ஜஸ்வந்த்சிங் விருப்பம் தெரிவித்திருந்தார். தான் போட்டியிடும் கடைசி தேர்தல் என்பதால் தமது சொந்த தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுப் பார்த்தார்.

BJP a one-man show, Jaswant Singh says

ஆனால் பாஜக அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதனால் பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார் .ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நிறுவனர் ஜின்னாவை புகழ்ந்ததற்காக பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார் ஜஸ்வந்த்சிங்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்வந்த்சிங், வாஜ்பாய் காலத்தில் கூட பாஜகவில் ஒரு நபர் ராஜ்ஜியம் நடந்தது. ஆனால் தற்போது அது நடந்து கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து மோடி அலை எதுவும் வீசவில்லை.

நான் மத்தியில் அமையப் போகும் எந்த அரசையும் ஆதரிப்பதாக சொல்லவில்லை. பிரச்சனைகளைப் பொறுத்து நாட்டின் நலனுக்காகத்தான் முடிவெடுப்பேன்.

இவ்வாறு ஜஸ்வந்த்சிங் கூறினார்.

English summary
In a direct attack on Narendra Modi, expelled leader Jaswant Singh on Friday said BJP has become a party of "one-man leadership" or by "small coterie" chosen by one personality.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X