For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் புதிய முதல்வர் யார்? விஜய் ரூபானி தகவல்!

குஜராத் மாநில புதிய முதல்வர் யார் என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

காந்திநகர்: குஜராத் மாநில புதிய முதல்வர் யார் என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தில் ஆட்சி புரிந்து வருகிறது பாஜக.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் ஒட்டுமொத்த நாடும் குஜராத் தேர்தலை உற்று நோக்கியது. குறிப்பாக ஏழை எளிய மக்களை வாட்டிய பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் நடைபெறும் தேர்தல் என்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமாக கண்காணித்தன.

மீண்டும் ஆட்சிக்கட்டிலில்

மீண்டும் ஆட்சிக்கட்டிலில்

எப்படியாவது இந்த முறை ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என தீவிரம் காட்டிய காங்கிரஸ்க்கு இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. குஜராத் மீண்டும் வெற்றி பெற்று பாஜகவே ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.

விஜய் ரூபானி நன்றி

விஜய் ரூபானி நன்றி


இருப்பினும் கடந்த தேர்தலைவிட இம்முறை காங்கிரஸ் கூடுதல் இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது மீண்டும் பாஜகவை வெற்றி பெற செய்த குஜராத் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த 5 ஆண்டுகளுக்கு குஜராத் மக்கள் விரும்புவதையே பாரதிய ஜனதா கட்சி செய்யும் எனவும் கூறியுள்ளார். அப்போது அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து குஜராத் புதிய முதல்வர் யார் என்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

மீண்டும் விஜய் ரூபானி?

மீண்டும் விஜய் ரூபானி?

குஜராத் மக்களுக்கு பாஜக மிகவும் கடன்பட்டிருப்பதாகவும் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். இதனிடையே குஜராத்தின் அடுத்த முதல்வராக விஜய் ரூபானியை தேர்வு செய்யப்படலாம் என உறுதி படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Gujarat Chief minister Vijay rupani said that BJP party chief will decide who will be the next CM of Gujarat. He said BJP will do what people wants.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X