For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வச்சுட்டாங்கள்ல.. மேற்கு வங்கத்தில் 18 லோக்சபா தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. அடுத்த குறி என்ன?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்குவங்க மாநில மக்களவை தேர்தலில் 18 தொகுதிகளை கைப்பற்றியுள்ள பாஜக அடுத்து என்ன என்பதற்கும் குறி வைத்துவிட்டது.

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக லோக் சபா தேர்தல் நடைபெற்றது. இதில் 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடைபெற்றது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கும் பாஜகவினருக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் ஏற்பட்டது. பிரதமர் மோடியை திருடன் என்று கூறி அனலை கக்கினார் மமதா.

டூ மச் அழகம்மை... பொண்ணை பெத்து இப்படியா வளர்ப்பாங்க? டூ மச் அழகம்மை... பொண்ணை பெத்து இப்படியா வளர்ப்பாங்க?

தனி கவனம்

தனி கவனம்

பிரதமர் மோடியும் மமதாவின் பேச்சுக்கு அசராமல் பதிலடி கொடுத்துவந்தார். மற்ற மாநிலங்களை காட்டிலும் பிரதமர் மோடி மேற்குவங்க மாநில பிரச்சாரத்தில் தனி கவனம் செலுத்தினார்.

மேற்குவங்க கலவரம்

மேற்குவங்க கலவரம்

இதன் தொடர்ச்சியாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா மேற்குவங்கத்தில் பேரணி நடத்தினார். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டதால் வன்முறை வெடித்தது. இதில் அங்குதிருந்த வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது. பலர் காயமடைந்தனர். மேற்குவங்கத்தில் வன்முறை கட்டுக்கடங்காமல் செல்வதை கண்ட தேர்தல் ஆணையம் ஒரு நாள் முன்னதாகவே தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தியது.

18 தொகுதிகள்

18 தொகுதிகள்

தொடர் கலவரம், பிரதமரின் புயல் நிவாரணம் வேண்டாம் என்ற மமதாவின் பேச்சு மேற்கு வங்க மாநில மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே மேற்கு வங்கத்தில் பாஜகவே எதிர்பார்க்காத 18 தொகுதிகளை அள்ளிக்கொடுத்தனர்.

உள்ளாட்சிக்கு குறி

உள்ளாட்சிக்கு குறி

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை குறி வைத்துள்ளது பாஜக அரசு. உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியை பொறுத்து 2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.

எங்களை ஏற்றுக்கொண்டனர்

எங்களை ஏற்றுக்கொண்டனர்

இதுதொடர்பாக மேற்குவங்க பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான கையிலாஷ் விஜய்வர்கியா பேசியதாவது, மோடியின் விஷன் புதிய இந்தியாவுக்கு மக்கள் நல்ல மதிப்பு கொடுத்துள்ளனர். இதுதான் திரிணாமுல் காங்கிரஸை மக்கள் ஓரம் கட்டியதற்கான காரணம். எங்களை ஏற்றுக்கொண்டு மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளை கொடுத்து பாதுகாப்பான ஆட்சியமைக்க உதவியுள்ளனர். இதன்தாக்கம் மேற்குவங்க நகராட்சி மற்றும் சட்டசபையிலும் காணப்பட்டது.

சட்டசபையும் எங்களுக்குதான்

சட்டசபையும் எங்களுக்குதான்

திரிணாமுல் காங்கிரஸின் ஜனநாயக விரோத போக்கே மக்கள் பாஜகவை ஏற்க காரணம். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொல்லையால் மக்கள் சலித்துப்போய்விட்டனர். கொல்கத்தா நகராட்சி தேர்தல மற்றும் 2021 சட்டசபை தேர்தல் மூலம் மேற்குவங்கத்தில் நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு பாஜகவின் மேற்குவங்க தேர்தல் பொறுப்பாளர் விஜய்வர்கியா கூறினார்.

English summary
BJP plans to take Westbengal Civic poll and West bengal Assembly in 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X