For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த முறை அமேதி தொகுதியையும் பாஜக விட்டுவைக்காது... அமித் ஷா சொல்கிறார்

Google Oneindia Tamil News

அமேதி: காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யாக பதவி வகிக்கும் அமேதி தொகுதியையும், பாஜக இந்த முறை கைப்பற்றும் என அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி நாடாளுமன்ற தொகுதியில் 2014 ம் ஆண்டு தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து, பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த மத்தியமைச்சர் ஸ்மிருதி இராணி, இந்த தேர்தலிலும், ராகுல் காந்தியை எதிர்த்து களமிறங்கியுள்ளார்.

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் அமேதி நகரில் இன்று திறந்த வாகனத்தில் சென்று ஸ்மிருதி இராணி வாக்கு சேகரித்தார்.

பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தி: கிழக்கு உ.பி.யில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது பாஜக? பெரும்பான்மை சமூகங்கள் கடும் அதிருப்தி: கிழக்கு உ.பி.யில் பெரும் பின்னடைவை சந்திக்கப் போகிறது பாஜக?

மக்களின் கூட்டமே சாட்சி

மக்களின் கூட்டமே சாட்சி

அப்போது, கூடியிருந்த கட்சி தொண்டர்களிடையே பேசிய அமித் ஷா, மோடியின் அரசு மீதும் பாஜகவின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு, பெருந்திரளாக கூடும் மக்களின் கூட்டமே சாட்சி என்றும், உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலைவிட கூடுதலான இடங்களில், பாஜக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

இந்திரா காந்தி குடும்பம்

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் அமேதி தொகுதி பல வகைகளில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்திரா காந்தி குடும்பத்தினரை, அமேதி மக்கள் பலமுறை தேர்ந்தெடுத்துள்ளனர்.

மின்சார வசதி கிடையாது

மின்சார வசதி கிடையாது

ஆனால், பல ஆண்டுகாலமாக மின்சார வசதி கிடைக்காத கிராமங்களுக்கும் மோடியின் ஆட்சியில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். வாரிசு ஆட்சிமுறை ஒழிந்து நாடு முன்னேற வேண்டுமானால் மத்தியில் மீண்டும் பாஜக அரசு அமைய வேண்டும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

மௌனமாக முடங்கும்

மௌனமாக முடங்கும்

மே 23 ம் தேதியன்று முடிவுகள் வெளியாகி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும் போது, எதிர்க்கட்சிகள் முடங்குவது மட்டுமில்லாமல், அவர்களது குற்றச்சாட்டுகள் எல்லாம் மௌனமாக முடங்கிப் போகும் எனவும் அவர் குறிப்பிட்டார்

English summary
BJP President Amit Shah and Union Minister Smriti Irani hold a road show in Amethi. Smriti Irani is BJP candidate from Amethi parliamentary constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X