For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வழக்கத்தை விடாமல் பின்பற்றும் பாஜக: நாகாலாந்தில் புதிய கட்சியின் முதுகில் ஓசி சவாரி

நாகாலாந்திலும் தனது வழக்கத்தை மாறாமல் இன்னும் பின்பற்றிக் கொண்டிருக்கிறது பாஜக.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    Baptist Church Council கடிதத்தால் பரபரப்பு

    டெல்லி: வழக்கத்தை விடாமல் பின்பற்றி வரும் பாஜக, நாகாலாந்தில் புதிய கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி அமைத்து ஓசியில் சவாரி செய்துக் கொண்டிருக்கிறது.

    நாகாலாந்தில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாஜக அங்கம் வகிக்கும் புதிய கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி முன்னிலை வகித்து வருகிறது.

    வடமாநிலங்களில் ஒவ்வொரு தேர்தலின்போது மாநில கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறி வருவது வாடிக்கையான ஒன்றுதான்.

    கூட்டணி முறிவு

    கூட்டணி முறிவு

    கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நாகாலாந்து மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்தது. தற்போது 2018-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்து கொண்டு புதிய கட்சியான என்டிபிபியுடன் கூட்டணி வைத்தது.

    ஒட்டிக் கொண்டு ஆட்சி

    ஒட்டிக் கொண்டு ஆட்சி

    அதன்படி பாஜகவுக்கு 19 தொகுதிகளிலும், என்டிபிபி 40 இடங்களிலும் போட்டியிட்டது. ஆளும் கட்சியான நாகாலாந்து மக்கள் முன்னணி 58 இடங்களில் போட்டியிட்டது. இந்த தேர்தலில் என்டிபிபி கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. இக்கட்சியுடன் பாஜக ஒட்டி கொண்டு ஆட்சி அமைப்பதாக கூறி கொள்கிறது.

    2017-இல் உருவாக்கிய புதிய கட்சி

    2017-இல் உருவாக்கிய புதிய கட்சி

    என்டிபிபி கட்சி என்பது நாகாலாந்து மாநில முன்னாள் முதல்வர் நிப்பியூ ரியோ என்பவருடையதாகும். நாகாலாந்து மக்கள் முன்னணியில் அதிருப்தியில் உள்ளவர்களும், ரியோவுக்கு ஆதரவாளர்களும் சேர்ந்து 2017-இல் உருவாக்கியதுதான் இந்த கட்சி.

    பெரிய கட்சி

    பெரிய கட்சி

    இதுபோன்ற புதிய கட்சியுடன் கைகோர்த்து கொண்டு இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி என்று ஒட்டுண்ணியாகவே சவாரி செய்வது பாஜக வழக்கமாக கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பாஜக பெரிய கட்சி இல்லை என்பது நிதர்சனம்.

    English summary
    BJP party not win in Nagaland. As it put allaince with a new party founded in 2017, NDPP, this party leads for winning. But BJP will say because of their development their party win in Nagaland.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X