For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கறுப்புப் பணத்தில் வாங்கியதா ராகுலின் ரூ.70,000 ஜாக்கெட்?... ஷில்லாங் பாஜக கிளப்பும் சர்ச்சை!

ஷில்லாங்கில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ராகுல்காந்தி அணிந்திருந்த ஜாக்கெட் விலை ரூ.70 ஆயிரம் என்று மேகாலய பாஜக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது..

By Gajalakshmi
Google Oneindia Tamil News

ஷில்லாங் : ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அணிந்திருந்த ஜாக்கெட் விலை ரூ. 70 ஆயிரம் என்று மேகாலய பாஜக புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேகாலய அரசின் கருவூலத்தை உறிஞ்சி அந்த கறுப்புப் பணத்தில் வாங்கியதா இந்த ஜாக்கெட் என்று பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் அடுத்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள 57 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேகாலயாவின் ஷாங்சக் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரும், முதல் மந்திரியுமான முகுல் சங்மா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் மேகாலயாவில் அந்தக் கட்சியை தோற்கடிக்க பாஜக தீயாக வேலை பார்த்து வருகிறது. ஷில்லாங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது ராகுல் நீல நிற பேண்ட்டும், கறுப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.

ராகுல் ஜாக்கெட் குறித்து கேள்வி

ராகுல் ஜாக்கெட் குறித்து கேள்வி

ராகுலின் இந்த ஜாக்கெட்டையும் சொகுசு உடைகளை விற்பனை செய்யும் பிரிஷ்டிஷின் பர்பெர்ரி நிறுவனத்தின் ஜாக்கெட்டையும் ஒப்பிட்டு மேகாலய பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. அதில் கடுமையான குளிரையும் தாங்கக் கூடிய இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.68,145 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பு பணத்தில் வாங்கிய சூட் பூட்டா?

கறுப்பு பணத்தில் வாங்கிய சூட் பூட்டா?

ராகுலின் புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள கருத்தில் மேகாலயா அரசின் கருவூலத்தை உறிஞ்சி அதன் மூலம் பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கறுப்பு பணத்தில் இந்த சூட்-பூட்டை ராகுல் அணிந்துள்ளாரா? எங்களின் குறைகளை கூறுவதற்கு முன், மேகாலயாவில் உங்கள் கட்சி தலைமையிலான திறனற்ற அரசின் செயல்பாடு மற்றும் உங்களின் முரண்பாடான செயல்பாடுகள் குறித்துள் ரிப்போர்ட் கார்டு கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது கொடுங்க ரிப்போர்ட் கார்டு

இப்போது கொடுங்க ரிப்போர்ட் கார்டு

குஜராத் தேர்தலின் போது வளர்ச்சி குறித்து ராகுல் அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மேகாலயா தேர்தல் நிலவரம் குறித்து ரிப்போர்ட் கார்டு கொடுக்கலாம் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

மோடியின் கோட் சூட் சர்ச்சை

மோடியின் கோட் சூட் சர்ச்சை

2015 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்த போது இந்த சந்திப்பிற்காக பிரதமர் மோடி, காஸ்ட்லி கோட் அணிந்ததை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது. மோடி, சூட்-பூட் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து காங்., விமர்சித்து வந்தது.

ராகுல் விளக்குவாரா?

ராகுல் விளக்குவாரா?

மோடி அணிந்த கோட் பின்னர் ஏலம் விடப்பட்டது. ரூ.11 லட்சம் ஆரம்ப விலையாக வைத்து ஏலம் விடப்பட்ட இந்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. மோடியை விமர்சித்த ராகுல் இப்போது காஸ்ட்லி ஜாக்கெட் அணிந்ததற்கு என்ன சொல்ல போகிறார் எனவும் பாஜனவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

English summary
BJP Meghalaya tweeted about Rahulgandhi's costly Jacket and asked boot ki sarkar with ‘black’ money fleeced from Meghalayan State exchequer by rampant corruption?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X