For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடப்பாவமே.. குஜராத்தில் பாஜக படு பாதாளத்திற்கு போய்விட்டதா? வீடியோவை பாருங்கள் உண்மை தெரியும்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அடப்பாவமே.. குஜராத்தில் பாஜக படு பாதாளத்திற்கு போய்விட்டதா?- வீடியோ

    காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக நிலைமை படுமோசமாக போய்க்கொண்டுள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

    குஜராத்தில் வரும் டிசம்பர் 9 மற்றும் 14ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற, 'குஜராத் மண்ணின் மகன்' நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளால் குஜராத் வணிகர்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் பெரும்பாலான மக்கள் கோபம் பாஜகவுக்கு எதிராக திரும்பியுள்ளது அவர்களின் தொடர் போராட்டங்கள் மூலம் உறுதியானது.

    மோடிக்கே கூட்டம் சேரவில்லை

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் கூட போதிய அளவுக்கு மக்கள் சேருவதில்லை என்று விமர்சனம் செய்து போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாக சுற்றுகின்றன.

    முதல்வர் பேச்சு?

    முதல்வர் பேச்சு?

    மேலும் வத்வான் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரிடம் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி போனில் பேசுவதை போலவும், அந்த உரையாடலில் பாஜக நிலைமை மோசமாக இருப்பதாக கூறுவதாகவும் ஒரு ஆடியோ வைரலாக சுற்றி வருகிறது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதான் பேரணியா

    இதுதான் பேரணியா

    இந்த நிலையில், தான்போட்டியிடும், ராஜ்கோட் தொகுதியில், முதல்வர் விஜய ரூபானி பைக் மூலம் தொண்டர்களுடன் பேரணியாக சென்று வாக்கு சேகரித்துள்ளார். பேரணி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், வந்தது என்னவோ சிறு அணிதான்.

    பாதாளத்தில் பாஜக

    பாதாளத்தில் பாஜக

    சொற்ப எண்ணிக்கையிலான தொண்டர்கள் மட்டுமே முதல்வருடன் பைக்கில் சென்றனர். வீதிகளிலும் பெரிதாக மக்கள் கூட்டம் இல்லை. இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. பாஜக நிலைமை மோசமாக உள்ளது என்று வெளியான செய்திகளை ஊர்ஜிதப்படுத்துவதை போல உள்ளது இந்த வீடியோ.

    English summary
    BJP rally of Gujarat CM Vijay Rupani in his Rajkot constituency attended by less number of workers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X