For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"ஏக் பாரத்" தான்... வைகோவின் "இந்திய ஐக்கிய நாடுகள்" கோரிக்கைக்கு பாஜக பதிலடி!!

By Mathi
|

டெல்லி: நாட்டின் பெயரை 'இந்திய ஐக்கிய நாடுகள்" என்று மாற்றம் செய்ய கோரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது வைகோவின் மதிமுக. ஆனால் மதிமுக கூட்டணி வைத்திருக்கும் பாரதிய ஜனதாவோ, "ஏக் பாரத்" அதாவது ஒரே இந்தியாதான் என்று தனது தேர்தல் அறிக்கையில் பதிலடி கொடுத்திருக்கிறது.

டெல்லியில் பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. 52 பக்க தேர்தல் அறிக்கையின் பிரதான அம்சமே "ஒரே இந்தியா, அகண்ட இந்தியா" என்று தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறது.

ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சியான மதிமுக, ஒரே இந்தியா- அகண்ட இந்தியாவின் கொள்கைக்கு நேர் எதிராக "இந்திய ஐக்கிய நாடுகள்" என்ற தேசிய இனங்களின் இருப்பை பதிவு செய்யும் வகையில் கோரிக்கை விடுத்தது.

மேலும் ஜம்மு காஷ்மீர் தேசிய இனத்துக்கு மத்திய அரசு கொடுத்துள்ள சிறப்பு அதிகாரங்களைக் கொண்ட அரசியல் சாசனப் பிரிவு 370ஐ ரத்து செய்வோம் என்கிறது மாநில சுயாட்சி பேசுகிற மதிமுகவின் 'கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாரதிய ஜனதா.

English summary
The BJP today released its much-delayed manifesto on a day India began voting for a new government in the first of a nine-phase general election spread over 36 days. "Ek Bharat, Shreshtha Bharat" (One India, great India) and "Sabka Saath, Sabka Vikaas" are the main slogans of the 52-page manifesto.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X