For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அசாமில் பாஜக கூட்டணி உடைந்தது... குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மேலும் ஒரு கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது- வீடியோ

    கவுகாத்தி: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து ஏஜிபி கட்சி விலகி உள்ளது.

    அசாம் கனா பரிஷத் (ஏஜிபி), பாஜக உடன் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்லா மகந்தா தெரிவித்துள்ளார்.

    2016 ஆம் ஆண்டிற்கான குடியுரிமை (திருத்தம்) மசோதா, 1985 அசாம் உடன்படிக்கையின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது என தெரிவிக்ப்பட்டுள்ளது.

    கூட்டணி உடைந்தது

    கூட்டணி உடைந்தது

    126 உறுப்பினர்களை கொண்ட அசாம் சட்டமன்றத்தில், ஆளும் கூட்டணியில் பாஜக (61), போடோலாந்து மக்கள் முன்னணி (13 ) மற்றும் ஏஜிபி (14 ) ஆகிய கட்சிகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் ஏஐயூடிஎஃப் (AIUDF) க்கு 25 மற்றும் 13 உறுப்பினர்கள் உள்ளனர். அதே நேரம், அமைச்சரவையில், ஏ.ஜி.பி கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் அமைச்சர்களாக இருந்தனர்.

    ராஜ்நாத்சிங்

    ராஜ்நாத்சிங்

    இதுதொடர்பாக டெல்லியில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்திய நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அதுல் போரா. இதுபற்றி அவர் கூறுகையில், தேசிய குடியுரிமை பதிவு நடைமுறையை பயனற்றதாக்கும் வகையில், குடியுரிமை சட்டம் உள்ளது என்பதை ராஜ்நாத்சிங்கிடம் எடுத்துக் கூறினேன். ஆனால், அவர், லோக்சபாவில் இந்த சட்டம் நிறைவேறுவது உறுதி என்று கூறிவிட்டார். எனவே, கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றார்.

    ஏஜிபி விலகியது

    ஏஜிபி விலகியது

    ஆனால், இன்று, மக்களவையில் நிறைவேற்றப்படும் என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். இதைத் தொடர்ந்து, கூட்டணியில் ஏஜிபி விலகி உள்ளது. இதனை தவிர வேறு எந்த கேள்விக்கும் இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் போரா தெரிவித்துள்ளார்.

    பொறுப்பு இருக்கிறது

    பொறுப்பு இருக்கிறது

    இதற்கிடையே, டின்சுகியாவில் நடந்த கூட்டத்தில் அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனுவால் பேசியதாவது: "நாங்கள் தலைமையில் இருக்கும் வரை, மாநில மக்களின் நலன்களை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளோம். அது எனது பொறுப்பு. நாங்கள் சொன்னதை நேர்மையுடன் நிறைவேற்றுவோம். நான் மண்ணின் மைந்தானாக இருக்கிறேன், அசாமிய மக்கள் தங்கள் சொந்த இடங்களில் ஓரங்கட்டப்படுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்றார்.

    English summary
    The AGP has withdrawn suppport from the BJP ally; opposing the Citizenship Bill.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X