For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமப்புற ஏழை வாக்காளர்களை இலக்கு வைத்து மத்திய பாஜக அரசு பட்ஜெட்!

கிராமப்புற ஏழை வாக்காளர்களை இலக்கு வைத்து மத்திய பாஜக அரசின் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தங்களுக்கு பெருமளவில் ஏமாந்து போய் வாக்களிக்கக் கூடியவர்கள் கிராமப்புற வாக்காளர்கள்தான் என்கிற நம்பிக்கையில் பட்ஜெட்டில் அறிவிப்புகளை அள்ளிவிட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இந்திய வாக்காளர்கள் சமூகத்தைப் பொறுத்தவரையில் 3 பிரிவுகளாக பிரிக்கலாம். நடுத்தர நகர்ப்புற வாக்காளர்கள், கிராமப்புற ஏழை விவசாய வாக்காளர்கள், சிறுபான்மையினர் என்பதுதான் இந்திய வாக்காளர் சமூகம்.

நடுத்தர நகர்ப்புற வாக்காளர்கள் தங்களை எந்த வகையிலும் கைவிடமாட்டார்கள் என்கிற மிதமிஞ்சிய நம்பிக்கை பாஜகவுக்கு உண்டு. குறிப்பாக நடுத்தர நகர்ப்புற வாக்காளர்களில் முற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நிச்சயம் தங்களது வாக்கு வங்கியாகவே தொடருவார்கள் என நம்புகிறது பாஜக. என்னதான் விரக்தியில் இருந்தாலும் ஏதோ ஒரு நம்பிக்கையிலாவது நடுத்தர வர்க்க வாக்காளரகள் வாக்களிப்பார்கள் என்பது பாஜக எதிர்பார்ப்பு.

எதிர்க்கட்சிகளுக்குதான்

எதிர்க்கட்சிகளுக்குதான்

சிறுபான்மை வாக்காளர்களைப் பொறுத்தவரையில் ஒருபோதும் தங்களுக்கு வாக்களிக்கப் போவது இல்லை என்பது பாஜகவுக்கு தெரியும். ஆட்சியில் இல்லாத போதே அவர்களை வாட்டி வதைத்தது பாஜக. மத்தியில் மாற்றத்தின் பெயரால் ஆட்சி அமைத்த போதும் சிறுபான்மையினரை ஒடுக்குவதில்தான் அவ்வளவு முனைப்பைக் காட்டியது பாஜக மத்திய அரசு. இதனால் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குத்தான் சிறுபான்மை வாக்குகள் செல்லும் என்பதில் பாஜகவுக்கு துளியும் சந்தேகம் இல்லை.

ரூ15 லட்சம் வாக்குறுதி

ரூ15 லட்சம் வாக்குறுதி

கிராமப்புற ஏழை விவசாய வாக்காளர்களைப் பொறுத்தவரையில் தங்களை யார் மகிழ்விக்கிறார்களோ அவர்களுக்குத்தான் வாக்கு என்பதில் தெளிவாக இருக்கிறவர்கள். கடந்த லோக்சபா தேர்தலில், நாங்கள் வென்றால் வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் போடுவோம் என ஆசைவார்த்தை காட்டி வாக்குகளைக் கவர்ந்தது பாஜக. பாஜகவின் பலம் வாய்ந்த பெரும்பான்மைக்கு காரணமே கிராமப்புற தொகுதிகளில் முதல் முறையாக அறுவடை கிடைத்தது என்பதுதான்.

அளவில்லா அக்கறை

அளவில்லா அக்கறை

ஆனால் கடந்த 4 ஆண்டுகால அந்த அப்பாவி வாக்காளர்களைப் பற்றி எந்த கரிசனமும் காட்டவில்லை பாஜக அரசு. வறட்சியிலும் பஞ்சத்திலும் வாடி தவித்த அவர்களுக்கு தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்காத பாராமுக அரசாகத்தான் பாஜக இருந்தது. இப்போது திடுமென அவர்கள் மீது அக்கறை அளவில்லாமல் எழுந்து வந்துள்ளது பாஜகவுக்கு.

வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை

வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கை


இதனால்தான் ஏராளமான நலத் திட்டங்களை கிராமப்புறங்களுக்கும் விவசாய துறைக்கும் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்த அறிவிப்புகளை நம்பியாவது கிராமப்புற வாக்காளர்கள் நமக்கு வாக்களிக்காமாட்டார்களா? என்ற ஏக்கப் பெருமூச்சின் வெளிப்பாடாகத்தான் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் இருக்கிறது.

இலவு காத்த கிளி!

English summary
Finance Minister Arun Jaitley focusing primarily on rural voters in Budget 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X