For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு.. 2 துணை முதல்வர்கள் இன்று பதவி ஏற்பு!

கோவாவின் புதிய முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவி ஏற்பு

    பனாஜி: கோவாவின் புதிய முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவி ஏற்று இருக்கிறார்.

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் நேற்று முதல்நாள் உடல்நலக்குறைவால் காலமானார். கணைய புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் காலமானார்.

    இந்த நிலையில் புதிய கோவா முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது . யார் முதல்வராக வருவார் என்பது பெரிய கேள்வி நிலவி வந்தது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சி அமைக்க உரிமை கோரியது. இந்த நிலையில் இரவோடு இரவாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

    எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்க.. தீபாவிடம் விருப்ப மனு கொடுத்த டிரைவர் ராஜா

    பிரச்சனை

    பிரச்சனை

    நேற்று முதலில் இரவு 11 மணிக்கு கோவாவின் பாஜக முதல்வர் பதவி ஏற்பார் என்று கூறப்பட்டது. பாஜக இதற்கான ஏற்பாடுகளை செய்தது. ஆனால் சுயேட்சைகள் இதற்கு எதிராக தொடர்ந்து நிறைய கட்டுப்பாடுகளை, கோரிக்கைகளை விதித்து வந்தது. இதனால் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

    எப்போது

    எப்போது

    இரவு முழுக்க இந்த பிரச்சனை நீடித்தது. இதனால் நேற்று இரவு 2 மணிக்கு பதவி ஏற்பு நடைபெற்றது. முதல்வர், துணை முதல்வர்கள், அமைச்சர்கள் நேற்று இரவோடு இரவாக இரண்டு மணிக்கு பதவி ஏற்றனர்.

    2 நபர்கள்

    2 நபர்கள்

    கோவாவில் பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்பே இந்த பதவி ஏற்பு நிகழ்ந்து இருக்கிறது. மஹாராஷ்டிரவாடி கோமன்டாக் கட்சி, கோவா பார்வேர்ட் கட்சி, சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி ஆட்சி அமைத்துள்ளது. கோவா துணை முதல்வராக இரண்டு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. கோவா பார்வேர்ட் கட்சியை சேர்ந்த விஜய் சர்தேசி மற்றும் மஹாராஷ்டிரவாடி கோமன்டேக் கட்சியை சேர்ந்த சுதீன் தவலிகர் ஆகியோர் துணை முதல்வர்களாகி உள்ளனர்.

    மொத்தம் எத்தனை

    மொத்தம் எத்தனை

    அதேபோல் மொத்தம் 9 அமைச்சர்கள் பதவி ஏற்று இருக்கிறார்கள். மனோகர், ரோஹன், கோவிந்த், வினோத், ஜெயேஷ், மாவின், விஸ்வஜித், மில்னந் நாயக், நிலேஷ் ஆகியோர் பதவி ஏற்று இருக்கிறார்கள். சட்டசபை சபாநாயகராக தற்போது தற்காலிகமாக மைக்கேல் லோபோ செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    BJP's Pramod Sawant Takes Oath as Goa Chief Minister: 2 Dept. CM was also Sworn in in 2'O clock ceremony.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X