For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குப் பதிவு அன்று கோ பூஜை.. இன்று மலர் பூஜை.. ஸ்ரீராமுலுவின் பிரார்த்தனை சாமிக்கு கேட்டிருக்குமா?

வாக்குப் பதிவு அன்று கோ பூஜை செய்த ஸ்ரீராமுலு வாக்கு எண்ணிக்கையான இன்றும் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான இன்று பாஜகவின் வேட்பாளர் ஸ்ரீராமுலு பூஜை, புனஷ்காரம் செய்து வருகிறார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் பாஜகவா, காங்கிரஸா யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் தொற்றிக் கொண்டது.

என்ன சொல்லுகிறது

என்ன சொல்லுகிறது

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி , தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் சரி எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்றும் ஜேடிஎஸ் கட்சியின் ஆதரவின் பேரிலேயே ஏதாவது ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ளன.

இன்று கவுன்ட்டிங்

இன்று கவுன்ட்டிங்

மொத்தம் 222 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் முக்கிய வேட்பாளர்கள் என்று பார்த்தால் சித்தராமையா, அவரை எதிர்த்து போட்டியிடும் ஸ்ரீராமுலு, எடியூரப்பா உள்ளிட்டோராவர். இவர்களில் ஸ்ரீராமுலு, சுரங்க ஊழலில் சிக்கிய ஜனார்த்தன ரெட்டியின் நண்பர் என்றும் அவரை வைத்து பாஜக பிரசாரம் செய்கிறது என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இன்றும் பூஜை

இன்றும் பூஜை

வாக்கு பதிவு நாளான சனிக்கிழமை பாதாமி தொகுதியில் போட்டியிட்ட ஸ்ரீராமுலு கோ பூஜை செய்தார். வாக்கு எண்ணிக்கை நாளான இன்றும் வீட்டில் சிறப்பு பூஜை செய்து வருகிறார். இவரது பிரார்த்தனை கடவுளுக்கு கேட்டிருக்குமா என்பது இன்று தெரிந்து விடும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 38 வாக்கு எண்ணும் மையங்களில் 50,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆங்காங்கே போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

English summary
BJP's B.Sriramalu prays ahead of counting of votes. He is contesting against CM Siddaramaiah from Badami constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X