For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிக் கலரு ஜிங்குச்சா.. பீகாரைக் கலக்கும் மோடி சேலைகள்!

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் பெண்களைக் குறி வைத்து பாஜக தரப்பு செம "அட்டாக்"கை ஆரம்பித்துள்ளது. அங்கு மோடி படம் போட்ட சேலைகளை விற்பனைக்கு விட்டு மக்களை கவர்ந்து வருகின்றனராம்.

அது மட்டுமல்லாமல் மோடி தொப்பி, மோடி டிசர்ட் என்றும் விதம் விதமாக அசத்தி வருகின்றனர். இந்த சேலை, டிசர்ட் எல்லாமே குஜராத்தின் சூரத்திலிருந்து வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறதாம். கிட்டத்தட்ட 10 லட்சம் சேலைகளை இதற்காக டிசைன் செய்து பீகாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெண்களை கவர்ந்தால் கணிசமான வாக்குகளை அள்ளி விடலாம் என்ற எண்ணத்தில் டிசைன் டிசைனாக மோடி படம் போட்ட சேலைகள களம் இறக்கியுள்ளது பாஜக.

சூரத் சேலைகள்

சூரத் சேலைகள்

சூரத்திலிருந்து இந்த சேலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 5 லட்சம் சேலைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மோடி படம் போட்டு

மோடி படம் போட்டு

இந்த சேலையில் மோடி படத்தைப் போட்டு வைத்துள்ளனர். காவி நிறத்தில் பல சேலைகள் உள்ளன.

லோக்சபா தேர்தலைப் போலவே

லோக்சபா தேர்தலைப் போலவே

ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்கு முன்பும் இதேபோல சேலையை வழங்கினர். அப்போது சேலையில் ஆப்கி பார் மோடி சர்க்கார் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இப்போது சப்கா சாத் சப்கா விகாஸ் என்று எழுதியுள்ளனர். அதாவது அனைவரும் இணைந்து ஒன்றாக உயர்வோம் என்று அர்த்தமாகும்.

ஒரு வீடு விட மிஸ் ஆகக் கூடாது

ஒரு வீடு விட மிஸ் ஆகக் கூடாது

பீகாரில் உள்ள ஒரு வீடு விடாமல் அத்தனை வீடுகளிலும் மோடி சேலைகள் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் லட்சியமம்.

பாக்கெட் போட்டு

பாக்கெட் போட்டு

இந்த சேலைகளை ஸ்பெஷலாக பாக்கெட்டில் போட்டு விநியோகிக்கின்றனர். இதற்காக சேலை வியாபாரிகள் பலரையும் நியமித்து வேலை செய்து வருகின்றனராம்.

தொப்பி - டிசர்ட்டும்

தொப்பி - டிசர்ட்டும்

இதேபோல மோடி படம் போட்ட தொப்பி, டிசர்ட் போன்றவையும் வழங்கப்படுகின்றன. பெண்களுக்கும் மோடி தொப்பி தருகிறார்களாம்.

அடேங்கப்பா செலவு

அடேங்கப்பா செலவு

இந்த சேலைகளுக்காக மட்டும் பாஜக ரூ. 200 கோடியை செலவிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். 10 லட்சம் அல்ல, 20 லட்சம் சேலைகளை பாஜக விநியோகித்திருப்பதாக ஐக்கிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது.

English summary
All political parties including RJD, JD(U), Congress and many others are in full swing in the Assembly elections in Bihar. The BJP, which is determined to form government in the state, too has begun its task. According to media reports, the party is distributing 'Modi Saris' ahead of the assembly election in Bihar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X