For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாகிஸ்தான் ஜிந்தாபாத்.. ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரையில் கிளம்பிய கோஷம்? பாஜக வெளியிட்ட வீடியோ

Google Oneindia Tamil News

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் சகோதரி பிரியங்கா காந்தியுடன் சேரந்து ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை சென்ற நிலையில் ‛பாகிஸ்தான் ஜிந்தபாத்' என கோஷமிடப்பட்டுள்ளதாக கூறி பாஜக சார்பில் வீடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளது.

தொடர் தோல்வியால் துவண்டு போய் உள்ள காங்கிரஸ் கட்சி வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதற்காக ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி துவக்கினார்.

4வது முறை.. சென்னை வந்தே பாரத் ரயிலும் விபத்தில் சிக்கியது.. கன்றுக்குட்டி மோதியதில் சேதம்! 4வது முறை.. சென்னை வந்தே பாரத் ரயிலும் விபத்தில் சிக்கியது.. கன்றுக்குட்டி மோதியதில் சேதம்!

பாரத் ஜோடோ யாத்திரை

பாரத் ஜோடோ யாத்திரை

கன்னியாகுமரியில் துவங்கிய இந்த யாத்திரை காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தம் 3300 கிலோமீட்டர் கடந்து இந்த யாத்திரை காஷ்மீரை சென்றடைய உள்ளது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் தற்போது இந்தகடந்து ஜம்மு காஷ்மீரை அடைய உள்ளது. தற்போது ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் யாத்திரை

மத்திய பிரதேசத்தில் யாத்திரை

இந்த யாத்திரையின்போது ராகுல் காந்திக்கு சமூக ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் யாத்திரையின் ஒருபகுதியாக ராகுல் காந்தி பொதுக்கூட்டங்களில் பேசி மத்திய பாஜக அரசை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். இந்நிலையில் தான் மத்திய பிரதேசத்தில் நடக்கும் பாரத் ஜோடோ யாத்திரையில் நேற்று ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி இணைந்து கொண்டார். 2வது நாளாக இன்றும் அவர் யாத்திரை சென்றார்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்

இந்நிலையில் தான் பாரத் ஜோடோ யாத்திரையில் ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பாஜகவின் சமூக வலைதள பிரிவு தலைவர் அமித் மாளவியா வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் கமல்நாத் ஆகியோர் நடந்து செல்கின்றனர். இந்த வேளையில் அவர்களுடன் செல்பவர்கள் தொடர்ந்து கோஷமிட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனும் சத்தம் கேட்பதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

மேலும் அமித் மாளவியா, ‛‛ மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ராகுல்காந்தியின் பாராத் ஜோடோ யாத்திரையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்ப்பபட்டது. இதனை காங்கிரஸ் எம்பி பதிவிட்ட பிறகு நீக்கம் செய்துவிட்டார். இதுதான் காங்கிரஸின் உண்மை முகம்'' என அவர் கூறியுள்ளார்.

 காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் பதிலடி

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தவறான தகவல்களை பரப்புவதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‛‛பாரத் ஜோடோ யாத்திரை மிகவும் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனை இழிவுப்படுது்தும் வகையில் பாஜகவால் உருவாக்கப்ட்ட வீடியோ பகிரப்படுகிறது. இதில் தேவையான சட்ட நடவடிக்கையை எடுத்து வருகிறோம். எத்தகைய தந்திரங்கள் செய்தாலும் அதற்கான பதிலடியை வழங்க தயாராக இருக்கிறோம்'' என கூறியுள்ளார்.

கருத்து மோதல்கள்

கருத்து மோதல்கள்

இந்த விஷயத்தில் தற்போது பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இடையே சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. முன்னதாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை செல்லும்போது குண்டு வெடிக்க செய்யப்படும் என ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதும், இதையடுத்து பாரத் ஜோடோ யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது

English summary
A video has been released on behalf of the BJP claiming that Rahul Gandhi joined his sister Priyanka Gandhi in the Bharat Jodo Yatra in Madhya Pradesh and chanted Pakistan Zindabad''. The Congress party has responded with a barrage to this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X