For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் 150 இடங்கள் டார்கெட் மிஸ்ஸானது ஏன்? அமித்ஷா விளக்கம்!

குஜராத்தில் 150 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறிய பாஜக வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குஜராத்தில் 150 தொகுதியை அடைய முடியாதது ஏன் ? அமித்ஷா விளக்கம்- வீடியோ

    டெல்லி: குஜராத்தில் 150 இடங்களை கைப்பற்றுவோம் எனக்கூறிய பாஜக வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி வெற்றியை பெற்றுள்ளது.

    குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் குஜராத் மற்றும் ஹிமாச்சல் ஆகிய 2 மாநிலங்களிலம் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

    குஜராத்தில் 99 இடங்களை கைப்பற்றி பாஜக தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குஜராத்தை தனது கோட்டையாக வைத்துள்ள பாஜக இம்முறையும் அதனை தக்கவைத்துள்ளது.

    குஜராத்தில் பாஜக வெற்றி

    குஜராத்தில் பாஜக வெற்றி

    பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு இந்த தேர்தல் சம்மட்டி கொடுக்கும் என்றன. ஆனால் 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

    டார்கெட் மிஸ்ஸானது

    டார்கெட் மிஸ்ஸானது

    வெற்றி பெற்றாலும் இது பாஜகவுக்கு பெரும் சரிவுதான் என கூறப்படுகிறது. பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என கூறியிருந்தது. ஆனால் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

    காங்கிரஸின் கேவலமான விமர்சனம்

    காங்கிரஸின் கேவலமான விமர்சனம்

    காங்கிரஸ் தனது கீழ்த்தரமான விமர்சனங்கள் மற்றும் பிரச்சாரத்தாலேயே பாஜகவுக்கு கடும் போட்டி கொடுத்ததாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இருப்பினும் பாஜக தார்மீக வெற்றியை பெற்றிருப்பதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    சாதி அரசியலுக்கு தோல்வி

    சாதி அரசியலுக்கு தோல்வி

    ஒட்டுமொத்தமாக 8 சதவீத வெற்றி ஒரு கடுமையான போட்டி இல்லை என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். இருமாநிலங்களிலும் கிடைத்த இந்த இரட்டை வெற்றி வாரிசு அரசியல், சாதி அரசியலுக்கு கிடைத்த தோல்வி என்றும் அவர் கூறினார்.

    புதிய சகாப்தத்தில் நுழைகிறது

    புதிய சகாப்தத்தில் நுழைகிறது

    பாஜகவின் வெற்றி அவர்களின் செயல்பாட்டுக்கு கிடைத்தது என்றும் இந்திய ஜனநாயகம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைவதாகவும் அவர் கூறினார்.

    English summary
    BJP seats reduced due to Congress campaign down said Amitshah. Its not tough fight said Amitshah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X