For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே.வங்கத்தில் ஒட்டுமொத்த இந்துக்கள் வாக்குகளை அள்ளிய பாஜக!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit Polls: மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் உதவியுடன் பாஜக விஸ்வரூப பாய்ச்சல்- வீடியோ

    கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாக்களித்ததால் பாரதிய ஜனதா கட்சி மிகப் பெரும் வெற்றியை பெற்றுள்ளதை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முடிவுகள் விவாதத்துக்குரியதாகி உள்ளது. இடதுசாரிகளின் தேசமாக இருந்த மேற்கு வங்கம் முழுமையாக தீவிர வலதுசாரி (பாஜக), மிதவாத வலதுசாரி பூமியாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    எங்கே போனார்கள் இடதுசாரிகள்? என்ற கேள்விக்கு 'தீவிர' வலதுசாரிகளாகிவிட்டனர்; ஆம் பாஜகவுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். மேற்கு வங்க மாநிலமானது தற்போது இந்துக்கள் வாக்கு வங்கி- இஸ்லாமியர் வாக்கு வங்கி என கூர்மைப்படுத்தப்பட்டு நிற்கிறது.

    தேர்தல் முடிவுகளை முன்வைத்து தி இந்து- சிஎஸ்டிஎஸ்- லோக்நிதி நடத்திய ஆய்வில் இது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜாதிகளைக் கடந்து இந்துக்கள் தங்களது பிரதிநிகளாக பாஜகவுக்கு வாக்குகளை அள்ளிக் குவித்திருக்கின்றனர்.

    பாஜக வேணாம்னு பேசினது எல்லாம் நாங்க.. ஆனா திமுக அறுவடை செய்திருக்கு.. சீமான் பாஜக வேணாம்னு பேசினது எல்லாம் நாங்க.. ஆனா திமுக அறுவடை செய்திருக்கு.. சீமான்

    57% இந்து வாக்குகள்

    57% இந்து வாக்குகள்

    2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு இந்துக்களில் 21% வாக்களித்தனர். திரிணாமுல் காங்கிரஸுக்கு 40% பேரும் இடதுசாரிகளுக்கு 29% பேரும் வாக்களித்தனர். இம்முறை பாஜகவுக்கு 57% இந்துக்கள் வாக்களித்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸுக்கு 29%; இடதுசாரிகளுக்கு 6% பேர்தான் வாக்களித்தனர். காங்கிரஸுக்கு கடந்த முறை 6% இந்துக்கள் வாக்குகள் கிடைத்தன; இம்முறை வெறும் 3%தான் கிடைத்திருக்கிறது.

    40% இஸ்லாமியர் வாக்குகள்

    40% இஸ்லாமியர் வாக்குகள்

    ஆனால் இஸ்லாமியர் வாக்குகள் ஒட்டுமொத்தமாக சுமார் 70% திரிணாமுல் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கிறது. கடந்த முறை இஸ்லாமியர்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு 40% பேர் வாக்களித்தனர். இடதுசாரிகளுக்கு 31%; காங்கிரஸுக்கு 24% பேர் வாக்களித்தனர். இம்முறை பாஜகவுக்கு 4%'; இடதுசாரிகளுக்கு 10%; காங்கிரஸுக்கு 12% பேர் வாக்களித்துள்ளனர்.

    பாஜகவுக்கே உயர்ஜாதி ஆதரவு

    பாஜகவுக்கே உயர்ஜாதி ஆதரவு

    அதேபோல் ஜாதிய அடிப்படையில் உயர்ஜாதியினர் 57%; இதர பிற்படுத்தப்பட்டோர் 65%; தலித்துகள் 61%; பழங்குடிகள் 58% பேர் பாஜகவுக்கே வாக்களித்துள்ளனர். ஆனால் கடந்த காலங்களில் இவை திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் சென்ற வாக்குகள்.

    வாக்கு சரிவை எதிர்கொள்ளும் கட்சிகள்

    வாக்கு சரிவை எதிர்கொள்ளும் கட்சிகள்

    கடந்த தேர்தலில் திரிணாமுலுக்கு 38% உயர் ஜாதியினர்; ஓபிசி 43%; தலித்துகள் 40% ஆதிவாசிகள் 40% பேர் வாக்களித்தனர். இம்முறை இந்த வாக்கு வங்கிகளில் கணிசமான சரிவை இரு கட்சிகளும் எதிர்கொண்டிருக்கின்றன.

    English summary
    According to the The Hindu CSDS-Lokniti Post-Poll Survey 2019, BJP got 57% Hindu votes; TMC secured 70% Muslims Votes in West Bengal.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X