For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2ஜி வழக்கில் நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும்.. குஷியில் சுப்பிரமணிய சாமி!

2ஜி வழக்கில் நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பரபரப்புக்கு பஞ்சமே இல்லை..ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப் பதிவு நாளில் 2ஜி வழக்கில் தீர்ப்பு!- வீடியோ

    டெல்லி: 2ஜி வழக்கில் நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த ‛2ஜி' ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

    BJP senior leader Subramaniya sami feeling happy for the 2G judgement date announcement

    இந்த வழக்கு, டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் நீதிபதி சைனி தீர்ப்புதேதி இன்று வெளியிடப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் என நீதிபதி சைனி தெரிவித்தார்.

    மேலும் தீர்ப்பு எழுதும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் நீதிபதி சைனி தெரிவித்தார். தீர்ப்பு தேதி அறிவிப்பை கேட்க பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி கோர்ட் வளாகத்திற்கு வந்திருந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். நிச்சயம் குற்றவாளிகள் சிறைக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார். 2ஜி வழக்கில் நாட்டிற்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்றும் சுப்பிரமணிய சாமி தெரிவித்தார்.

    English summary
    2G spectrum case Judgement is delivering on coming 21st of December. BJP senior leader Subramaniya sami feeling happy for the 2G judgement date announcement.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X