For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓடும் ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த பாஜக எம்.எல்.சி.. அதிரடி கைது

Google Oneindia Tamil News

பாட்னா: ஓடும் ரயிலில் 12-வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக வந்த புகாரையடுத்து பிகார் பாஜக எம்.எல்.சி. துன்னாஜி பாண்டே இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாஜக-வில் இருந்து அவர் இடை நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

பிகார் மாநில சட்டசபை பாஜக எம்.எல்.சி.யாக இருப்பவர் துன்னாஜி பாண்டே. இவர் நேற்றிரவு துர்காபூரில் இருந்து காஜிபூருக்கு பூர்வாஞ்சல் விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டார். ரயில் பயணத்தின் போது பாண்டே தனக்கு ஒதுக்கப்பட்ட பெர்த்க்கு அடுத்த பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிடம்(12) சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பாண்டே மறுத்துள்ளார். இது குறித்து பாண்டே கூறுயதாவது: நான் எதுவும் தவறு செய்யவில்லை. ரயிலில் லைட் ஆன் செய்து, செல்போன் சார்ஜரை பிளக்கில் இருந்து எடுக்க முற்பட்டேன். அப்போது, தான் அந்த சிறுமி அவரிடம் நான் தவறாக நடக்க முற்பட்டதாக கூறி கூச்சலிட்டார். அப்போது அங்கு தூக்கிக் கொண்டிந்தது ஆணா அல்லது பெண்ணா என்றே தெரியாது என்று கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இன்று காலை வைசாலி மாவட்டம் ஹாஜிபுர் ரயில் நிலைய ரயில்வே போலீஸார் பாண்டேயை கைது செய்தனர். இதன் பின்னர் அவர் ரயில்வே மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தபடுத்தப்பட்டார், அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

இந்நிலையில், பாஜக கட்சியில் இருந்து அவர் இடை நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து பாண்டே 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக பீகார் மாநில பாஜக துணைத் தலைவர் சஞ்சய் மயுக் தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் பாஜக கட்சியில் இருந்து முக்கிய தலைவர் சர்ச்சையில் சிக்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த 20-ந் தேதி உத்திரப் பிரதேச மாநில பாஜக துணைத் தலைவராக இருந்த தயாசங்கர் சிங், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி குறித்து சர்ச்சைக் குரிய கருத்தை வெளியிட்டார். இதையடுத்து தயாசங்கர் சிங் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், தற்போது பீகார் எம்எல்சியான துன்னாஜி பாண்டே சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

English summary
The BJP on Sunday suspended its Bihar Legislative Council member Tunna Ji Pandey from the party after he was arrested for allegedly sexually harassing a minor girl on a train.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X