For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி தேர்தல் தோல்வியை திசைதிருப்ப பொதுசிவில் சட்ட மசோதா தாக்கல்? - ரவிக்குமார் எம்.பி.

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP may focus on Uniform Civil Code| இன்று தாக்கலாகிறதா பொது சிவில் சட்டம்?

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் தோல்வியை திசைதிருப்புவதற்காக ராஜ்யசபாவில் பொதுசிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு இன்று தாக்கல் செய்யலாம் என்கிற யூகம் நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார்.

    டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியே அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    BJP to take Uniform Civil Code to divert attention from Delhi results?

    இந்நிலையில் அனைத்து எம்.பி.க்களும் இன்று நாடாளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று பாஜக கொறடா உத்தரவை பிறப்பித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

    டெல்லி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 50 தொகுதிகளுக்குமேல் ஆம் ஆத்மி முன்னிலை. டெல்லி தேர்தல் தோல்வியிலிருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப பொது சிவில் சட்ட மசோதாவை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்வார்கள் என்ற யூகம் நிலவுகிறது. என்ன நாடகம் ஆடினாலும் தோல்வியை மறைக்க முடியாது.

    இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.

    English summary
    VCK MP Ravikumar Said that BJP wil take Uniform Civil Code to divert the attention from Delhi results.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X