For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க தகிடுதத்தம்.... பாஜகவின் அடுத்த மிஷன்!

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கவும், அதை தக்க வைக்கும் பாஜக தயாராகிறது. இதற்கான அடுத்த மிஷன் துவங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய எடியூரப்பா- வீடியோ

    பெங்களூரு: மிஷன் 150 என்ற இலக்குடன் கர்நாடகா சட்டசபை தேர்தலில் களமிறங்கிய பாஜக, தற்போது ஆட்சியை பிடிக்கவும், அதை தக்க வைக்கவும் அதிக மிஷனுக்கு தயாராகி உள்ளது.

    கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 38 தொகுதிகளிலும், 2 தொகுதிகளில் சுயேச்சைகளும் வென்றனர்.

    தற்போதைய நிலையில் பெரும்பான்மைக்கு 112 பேர் ஆதரவு ஆதரவு. ஒரு சுயேச்சை ஆதரவு கிடைத்துள்ளதால், பாஜகவின் பலம் 105 ஆக உயர்ந்துள்ளது. உடனடியாக மேலும் 7 பேரில் ஆதரவு தேவை. இந்த நிலையில், ஒரேவேளை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் பாஜக உள்ளது.

    காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை இழுப்பதற்கான முயற்சி நடக்கிறது. அவ்வாறு எம்எல்ஏக்கள் முன்வந்து ஆதரவு அளித்தாலும், அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அவர்கள் உடன் இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான்.

    பாஜகவின் அடுத்த மிஷன்

    பாஜகவின் அடுத்த மிஷன்

    மிஷன் 150, அதாவது 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் பாஜக களமிறங்கியது. ஆனால் அது எதிர்பார்த்தது நடக்கவில்லை. இந்த நிலையில், 2008ல் செய்ததைப் போன்ற ஒரு மிஷனை செய்வதற்கு பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஆப்பரேஷன் லோட்டஸ்

    ஆப்பரேஷன் லோட்டஸ்

    2008 சட்டசபை தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 80, மஜத 28 தொகுதிகளில் வென்றன. 6 சுயேச்சைகள் வென்றனர். அப்போது செய்யப்பட்டது தான் ஆப்பரேஷன் லோட்டஸ். அந்த திட்டத்தின்படி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 எம்எல்ஏக்களை அவ்வப்போது ராஜினா செய்ய வைத்தனர். அதற்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வென்றது. இதன் மூலம் சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்தது.

    ஆப்பரேஷன் லோட்டஸ்

    ஆப்பரேஷன் லோட்டஸ்

    2008 சட்டசபை தேர்தலில் பாஜக 110 தொகுதிகளில் வென்றது. காங்கிரஸ் 80, மஜத 28 தொகுதிகளில் வென்றன. 6 சுயேச்சைகள் வென்றனர். அப்போது செய்யப்பட்டது தான் ஆப்பரேஷன் லோட்டஸ். அந்த திட்டத்தின்படி, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 எம்எல்ஏக்களை அவ்வப்போது ராஜினா செய்ய வைத்தனர். அதற்கு நடந்த இடைத் தேர்தலில் பாஜக வென்றது. இதன் மூலம் சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்தது.

    8 பேர் ஆதரவு போதும்

    8 பேர் ஆதரவு போதும்

    தற்போதைய நிலையில், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கான தேர்தல் 28ல் நடக்க உள்ளது. ஜெயாநகர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கையை பாஜக எடுக்கும். அதன்படி மேலும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதும். அதனால், தற்போது காங்கிரஸ் மற்றும் மஜதவைச் சேர்ந்த 8 பேரை வளைத்து, அவர்களை ராஜினாமா செய்ய வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

    பெரும்பான்மையை நிரூபிக்கலாம்

    பெரும்பான்மையை நிரூபிக்கலாம்

    இதன் மூலம், சட்டசபையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். தற்போதுள்ள பலத்தின் அடிப்படையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். மேலும் அடுத்து நடைபெறும் இடைத் தேர்தலில் அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவதற்கான நீண்ட கால நடவடிக்கையை தொடர பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.

    English summary
    BJP has started its next mission to form and retain the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X