For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உ.பி.யில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு துணை ராணுவப்படை... பாஜக கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லக்னௌ: உத்தரபிரதேச மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமரா, துணை ராணுவப் படை பாதுகாப்பு போன்றவைகளை ஏற்பாடு செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

ஆளும் சமாஜ்வாதி கட்சி முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதாலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக உ.பி.மாநில பாஜக தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லட்சுமிகாந்த் பாஜ்பாய், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது கடைசி நேரத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சி முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

எனவே பதற்றம் நிறைந்த மணிப்பூரி, இடவா,பெரோஷாபாத் உள்ளிட்ட எட்டு தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு தேவை. இங்கு மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும்.

வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யவும், சிசிடிவி கேமரா பொறுத்தவும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.மாநில போலீசார், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவார்கள் என்று எண்ணியே துணை ராணுவப் படை பாதுகாப்பு கேட்டுள்ளதாகவும் பாஜக தலைவர் லட்சுமிகாந்த் கூறியுள்ளார்.

English summary
BJP today urged the Election Commission to deploy Central Paramilitary forces and install closed circuit cameras at the counting stations, apprehending rigging during counting of votes by SP in Uttar Pradesh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X