For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கு.. ஆனால் இடங்கள் குறைந்துவிட்டதே!

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்றுள்ள வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்றுள்ள இடங்கள் கடந்த தேர்தலை காட்டிலும் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் 99 இடங்களை கைப்பற்றி பாஜக 6 வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறது.

பாஜகவுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி இதுவாகும். இருப்பினும் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது பாஜக தற்போது குறைவான இடங்களைதான் பெற்றுள்ளது.

41க்கும் மேற்பட்ட இடங்கள்

41க்கும் மேற்பட்ட இடங்கள்

இருப்பினும் பாஜக வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தெற்கு குஜராத் பகுதியில் பாஜக பெரும் வெற்றி கிடைத்துள்ளது. மற்றவர்களின் வாக்கு 6 சதவீதம் வரை பாதியாக குறைந்துள்ளது. 41க்கும் மேற்பட்ட இடங்களில் 20 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பாஜகவின் பல வாக்குகள் வீணாகியிருப்பது தெரியவந்துள்ளது.

நகர்ப்பகுதிகளில் 80% வெற்றி

நகர்ப்பகுதிகளில் 80% வெற்றி

பாஜக 36 இடங்களில் 25 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 41 இடங்களில் 20 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நகரப்பகுதிகளில் 80 சதவீத இடங்களை பாஜக கைப்பற்றியுள்ளது. அப்பகுதிகளில் பாஜக 57 சதவீத வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது.

நகரங்களில் ஜொலித்த பாஜக

நகரங்களில் ஜொலித்த பாஜக

பாஜக கிராமப்புறங்களில் 52 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கிராமப்புறங்களில் 68 இடங்களை அள்ளி அடித்து வெளுத்துள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் பாஜக 47 இடங்களை வென்றுள்ளது. ஆனால் காங்கிரஸ்க்கு நகர்புறங்களில் மரண அடி கிடைத்துள்ளது. காங்கிரஸ் நகர்ப்புறங்களில் 12 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

சாதிவாரியாக வாக்குகள்

சாதிவாரியாக வாக்குகள்

சாதிவாரியாக பார்க்கும் போது பட்டேல் இனத்தவர் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். 6 இடங்களை கைப்பற்றியுள்ள அவர்கள் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். ஓபிசி சாதியினர் 3 இடங்களைம் 3 சதவீத இடங்களையும் வென்றுள்ளனர். தலித்துகள் 3 சதவீத வாக்குகளையும் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குறைவான வித்தியாசம்

குறைவான வித்தியாசம்

குஜராத்தில் ஜஸ்ட்டில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பல இடங்களை கைப்பற்றியுள்ளன. 2000 வாக்குகள் வித்தியாசத்தில் இருகட்சிகளும் தலா 9 இடங்களை வென்றுள்ளன. 3000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக 16 இடங்களிலும் காங்கிரஸ் 13 இடங்களிலும் வென்றுள்ளது.

English summary
BJP vote share went up is that the vote of others was halved to 6%. Where the BJP won, in its strongholds of South Gujarat, or urban seats, it won big time. The BJP won more than 41 seats with a margin of 20%.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X