For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் முன்பாகவே இப்படி செய்யலாமா.. பாஜக மீது பாயும் சிவ சேனா

Google Oneindia Tamil News

பானாஜி: கோவா மாநிலத்தில் அதிகாலை நேரத்தில் பாஜக முதல்வர் பதவியேற்றதை சிவ சேனா கட்சி, சாம்னா நாளிதழில் கண்டித்துள்ளது.

கோவா மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர், மனோகர் பாரிக்கர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைந்தார். இதையடுத்து, திங்கள்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு, அரசு மரியாதை உடன் பாரிக்கர் உடல் மிராமர் கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.

இதையடுத்து புதிய முதல்வரை நியமிப்பதில் பாஜக தலைமை கவனம் செலுத்த ஆரம்பித்தது. 40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டசபையில், பாஜக 12, காங்கிரஸ் 15 பலம் இருந்தது. கோவா பார்வர்டு கட்சி 3, எம்.ஜி.பி 3, சுயேச்சைகள் 3 பேர் உள்ளனர். ஆக மொத்தம் 9 உறுப்பினர்களுடன் கூட்டணி சேர்ந்து, மொத்தம் 21 உறுப்பினர்கள் உடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.

அடுத்தடுத்து செய்யும் தவறுகள்.. ராகுல் காந்தி எதிர்காலத்தில் இதை நினைத்து வருத்தப்படுவார்! அடுத்தடுத்து செய்யும் தவறுகள்.. ராகுல் காந்தி எதிர்காலத்தில் இதை நினைத்து வருத்தப்படுவார்!

ஆளுநரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆளுநரிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற 19 இடங்களில், 2 உறுப்பினர்கள் மறைவால் காலியானது. மேலும் 2 உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ராஜினாமா செய்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது.

புதிய முதல்வர்

புதிய முதல்வர்

இதனால் கோவா மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதால், அவசரமாக செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணிக்கு, கோவா சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த் முதல்வராக பதவியேற்றார். இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்டவை சம்மதம் தெரிவித்தன.

புதிய முதல்வர்

புதிய முதல்வர்

இது ஜனநாயகத்தின் மோசமான செயல்பாடு. மனோகர் பாரிக்கர் அஸ்தி சூடு தணியும் வரை காத்திருந்து, செவ்வாய்க்கிழமை காலையில் புதிய முதல்வர் பதவி ஏற்றிருக்கலாம். பதவிக்கான பசி ஒவ்வொருவர் கழுத்தையும் பிடித்து நெரித்துக் கொண்டு உள்ளது. கூடுதலாக 4 மணி நேரம் காத்து இருப்பதில் என்ன தவறு வந்திருக்கும்.

ஆட்சி அதிகாரம்

ஆட்சி அதிகாரம்

ஆனால், ஆட்சியை கைப்பற்றுவதற்கு, காங்கிரஸ் முயற்சி செய்ததை மறுக்க முடியாது. பாஜக சார்பில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள இருவரையும் காங்கிரஸ் தனது பக்கம் இழுத்து ஆட்சியை கலைத்து விட திட்டமிட்டிருந்தது. எனவே பாஜக அவசரம் காட்டியிருக்கலாம். இருப்பினும், மனோகர் பாரிக்கர் உடல் மீது தூவப்பட்ட மலர்கள் வாடுவதற்கு, முன்பாக அதிகாரச் சண்டை அத்துமீறி சென்றது ஏற்புடையது கிடையாது, என்று சாம்னா பத்திரிக்கையில் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளது.

English summary
In a scathing attack on the political drama between the Bharatiya Janata Party (BJP) and its allies in Goa over the leadership issue, the Shiv Sena on Wednesday (March 20) dubbed it as a "terrible state of democracy", saying they did not even wait for late chief minister Manohar Parrikar's ashes to cool down.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X