For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்குச்சீட்டு முறையை அனைத்து கட்சிகளும் விரும்பினால் கொண்டு வர தயார்: பாஜக பொதுச்செயலாளர்

வாக்குச்சீட்டு முறையை அனைத்து கட்சிகளும் விரும்பினால் அதைக் கொண்டு வர தயார் என்று பாஜக பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

லக்னோ : வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர அனைத்துக் கட்சிகளும் விரும்பினால் அதைச் செயல்படுத்த பாஜக தயாராக உள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தலில் வாக்களிக்க வாக்குப்பதிவு இயந்திரங்களே பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில தேர்தல்களில் மிண்ணனு வாக்கு

BJP will process ballot paper Voting request if need

உத்தரபிரதேசத்தில் கடந்த ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போது பாஜக பெரும்வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. ஆனால் அதைத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

அதே சமயம், அம்மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலின் போதும், வடகிழக்கு மாநிலங்களின் தேர்தலின் போதும் இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகப், புகார் எழுந்ததை அடுத்து அந்த இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

இதுகுறித்து, இனி வரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடந்து வரும் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தேர்தல் முறையில் மக்கள் நம்பகத்தன்மை கொள்ளவேண்டுமெனில் வாக்குச்சீட்டு முறைதான் சிறந்தது என்றும் அந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ்விடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, வாக்குப்பதிவு இயந்திர முறையைக் கொண்டு வரும்போது அதை பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொண்டதால் தான் அது நடைமுறைக்கு வந்தது.

தற்போது, எதிர்க்கட்சிகள் அதை எதிர்த்து, வாக்குச்சீட்டு முறையைக் கேட்கின்றன. அதை அனைவரும் விரும்பினால் மீண்டும் அதை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்க பாஜக தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

English summary
BJP will process ballot paper Voting request if need says BJP Secretary Ram Madhav. He also added that, Voting machine process is implemented in country with the majority of Parties Choice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X