For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக பெரும்பான்மையை எப்படி நிரூபிக்கும்.. அமித் ஷா வைத்திருக்கும் 3 அஸ்திரங்கள்!

கர்நாடகா சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று முக்கியமான திட்டங்களை வைத்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜவுக்காக அமித் ஷா வைத்திருக்கும் 3 அஸ்திரங்கள்!- வீடியோ

    பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க மூன்று முக்கியமான திட்டங்களை வைத்துள்ளது. ஒரு திட்டம் சொதப்பினாலும் கடைசியில் இன்னொரு திட்டம் கைகொடுக்கும் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

    பல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். பாஜக கட்சி 104 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், ஆளுநர் பாஜக கட்சியையே ஆட்சி அமைக்க அழைத்தார். மாறாக 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

     பதவி ஏற்றுவிட்டார்

    பதவி ஏற்றுவிட்டார்

    எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார். பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 15 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் பாஜக இப்போதே, அதற்கான வழிகளை பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் மொத்தம் மூன்று விதமான முறைகளை பயன்படுத்தி பாஜக தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. பல மாநிலங்களில் கட்சிகள் எப்படி பெரும்பான்மையை நிரூபித்ததோ அப்படியே பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது.

     முதல் வழி

    முதல் வழி

    முதல் வழியாக, அமைச்சரவையின் பலத்தை குறைப்பது. தற்போது பாஜகவிடம் இருக்கும் 104 எம்எல்ஏக்கள் பலத்திற்கு தனியாக பெரும்பான்மையை நிரூபிக்கவே முடியாது. இதனால் அமைச்சரவையின் பலத்தை 207 ஆக குறைக்க பாஜக விருப்பப்படுகிறது. அமைச்சரவையின் பலத்தை எப்படியாவது 207 ஆக இதுகுறைத்தால் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இதற்காக மஜத எம்எல்ஏக்கள் சிலரை ராஜினாமா செய்ய சொல்ல வாய்ப்புள்ளது.

     இரண்டாவது

    இரண்டாவது

    இரண்டாவதாக, காங்கிரஸில் இருக்கும் அதிர்ச்சி எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை பாஜக கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க செய்ய இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் அதிர்ச்சி எம்எல்ஏக்களுக்கு பஞ்சமே இல்லை என்று கூறப்படுகிறது, முக்கியமாக பலர் சித்தராமையா மீதும், தற்போதைய கூட்டணி முடிவின் மீதும் கோபத்தில் உள்ளனர். இதனால் அவர்கள் கடைசி நேரத்தில் பாஜகவிற்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது.

     லிங்காயத்து அஸ்திரம்

    லிங்காயத்து அஸ்திரம்

    கடைசி அஸ்திரமாக பாஜக லிங்காயத்து அஸ்திரத்தை எடுக்க உள்ளது. மஜத, காங்கிரஸ் இரண்டு கட்சியிலும் லிங்காயத்து எம்எல்ஏக்கள் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையே 10 இருக்கும் என்று கூறப்படுகிறது . எடியூரப்பா இவர்களிடம் தனியாக பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் கடைசி நேரத்தில் பாஜகவிற்கு கைகொடுப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    There is hectic activity behind the scenes to ensure that the BJP cobbles up the numbers. The party is in touch with several MLAs and the fact that some of them are missing only adds fuel to the fire. This time there would be no 'Operation Lotus' that played out in 2008. The plan would be to bring down the House strength and ensure that many MLAs abstain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X