For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மம்தாவுக்கு சிங்கிள் ஷாக்.. கேசிஆருக்கு டபுள் ஷாக்! அடிச்சு தூக்கி 'பாஜக' ஆதிக்கம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும் நாம் தான் வெல்வோம் என்ற மிதமிஞ்சிய நம்பிக்கையில் மோடி அலையை தடுக்க தவறியதன் காரணமாக அடிச்சு தூக்கிய பாஜக தனது ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்டி உள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் கடந்த முறை 37 இடங்களில் வென்ற நிலையில் இந்த முறை 22 தொகுதிகளில் மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

bjp win 18 seats in west bengal, seats in telangana, mamta kcr shock

அதேநேரம் பாஜக அங்கு கடந்த முறை 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை 18 இடங்களில்வென்று கம்யூனிஸ்டுகளை மொத்தமாக காலிசெய்துவிட்டது.

விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ! விஷ்ணுபிரசாத் சொன்னது போல.. காடுவெட்டி குருவின் ஆத்மா பாமகவை இன்னும் மன்னிக்கலையோ!

வாக்கு சதவீத்தின் படி பார்த்தால் கடந்த முறை 2 தொகுதிகளை வென்ற போது 18 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் இந்த முறை 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே வரும் 2021ம் ஆண்டு பாஜக முதல்முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைத்தாலும் ஆச்சர்யப்படுதற்கில்லை.

அதேபோல் தான் தெலுங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளது. அங்கு வலிமையான தலைவராக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வெற்றி பெற்று முதல்வரான சந்திரசேகர ராவ் இந்த தேர்தலில் நடந்துள்ள அதிசயத்தை நினைத்து அதிர்ச்சியில் உள்ளார். ஏனெனில் அங்குள்ள 17 தொகுதிகளில் பாஜக தனித்து நின்று 4இடங்களில் வென்றுள்ளது. அத்தோடு கேசிஆரின் மகள் கவிதாவை பாஜக நிஜாமாபாத் தொகுதியில் வென்றது தான் கேசிஆருக்கு டபுள் ஷாக். ஓட்டு சதவீதமும் பெரிய அளவில் வந்துள்ளது. ஆனால் புள்ளி விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. விரைவில் தெரிந்துவிடும்.

English summary
lok sabha election results 2019 live updates: bjp win 18 seats in west bengal, seats in telangana, mamta kcr shock
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X