For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிக்கிம் தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக வெற்றி வாகை சூடிய பாஜக

Google Oneindia Tamil News

காங்டாக்: சிக்கிம் மாநில சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜக முதல் முறையாக 2 தொகுதிகளில் வெற்றி பெற்று வாகை சூடியுள்ளது.

சிக்கிம் முதல்வரான பிரேம்சிங் தமாங் என்ற பிஎஸ் கோலே போக்லோக் கம்ராங் தொகுதியில் போட்டியிட்டார். ஊழல் முறைகேடு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்ததால் தமாங், தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

BJP win 2 seats in Sikkim By Election

தேர்தலில் இவர் போட்டியிடுவதற்கான தடை காலத்தை ஓராண்டாக தேர்தல் ஆணையம் குறைத்தது. இதனையடுத்து தேர்தலை எதிர்கொண்ட தமாங் இத்தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் 84% வாக்குகளை தமாங் பெற்றார்.

முதல்வர் தமாங்கின் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, மார்ட்டாம் ரூம்டேக் தொகுதியில் பாஜகவின் வேன்சங்பா, காங்டாக் தொகுதியில் பாஜகவின் யங் தேசிரிங் லெப்சா ஆகியோர் அமோக வெற்றியைப் பெற்றனர். இம்மாநில சட்டசபை தேர்தலில் முதல் முறையாக பாஜக தேர்தலில் போட்டியிட்டு 2 இடங்களைப் பெற்றுள்ளது.

இப்பெல்லாம் மறுபடியும் ஆட்சியை பிடிப்பதே பெரிய விஷயம்தான்.. மோடிஇப்பெல்லாம் மறுபடியும் ஆட்சியை பிடிப்பதே பெரிய விஷயம்தான்.. மோடி

ஏற்கனவே சிக்கிம் ஜனநாயக முன்னணியை சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு தாவினர். இதனால் அம்மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடாமலேயே பாஜக எதிர்க்கட்சியானது. 32 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபையில் கட்சிகளின் பலம்: சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா- 19; பாஜக- 12; சிக்கிம் ஜனநாயக முன்னணி- 1.

English summary
In Sikkim By Elections BJP won 2 seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X