For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பட், பாஜகவுக்கு சந்தோஷமான வருஷம்தான் பாஸ் இது.. நம்பரைப் பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    அத்தனையும் வெற்றி .... 2017 பாஜகவுக்கு கண்டிப்பா சந்தோஷமான வருஷம் தான்- வீடியோ

    அகமதாபாத்: என்னதான் குஜராத்தில் தட்டுத் தடுமாறி ஆட்சியை தக்க வைத்தாலும் கூட பாஜகவுக்கு 2017ம் வருடம் நிச்சயம் சாதனை வருடம்தான். மொத்தமாக 7 தேர்தல்களில் அது 6ல் வென்று அசத்தியுள்ளது.

    காங்கிரஸ் கட்சி நிச்சயம் பாஜகவிடம் கற்றுத்தான் ஆக வேண்டும். 7 மாநில சட்டசபைத் தேர்தலில் 6 மாநிலங்களில் அது ஆட்சியைப் பிடித்தது சாமானிய விஷயமல்ல. அதிலும் உ.பியில் அது ஆட்சியைப் பிடித்த விதம் அடேங்கப்பா.. இன்னும் கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது.

    உத்தரகாண்ட்டில் தொடங்கிய பாஜகவின் வெற்றிப் பயணம் தற்போது குஜராத், இமாச்சலப் பிரதேசத்தில் வந்து நின்றுள்ளது. கோவாவில் பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் கூட கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.

    உத்தரகாண்ட்டில் பலமான ஆட்சி

    உத்தரகாண்ட்டில் பலமான ஆட்சி

    உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது பாஜக. அதன் பிறகு வந்தது உ.பி. சட்டசபை தேர்தல்.

    அதிரடியாக வென்ற உ.பி.

    அதிரடியாக வென்ற உ.பி.

    உ.பி. சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் வெற்றியை யாரும் எதிர்பார்க்கவில்லை. அத்தனை கட்சிகளையும் அடித்து நொறுக்கி வென்றது பாஜக.

    மணிப்பூரில் பாஜக

    மணிப்பூரில் பாஜக

    அடுத்து மணிப்பூரிலும் பாஜகவின் ஆட்சி அமைந்தது. காலம் காலமாக காங்கிரஸுக்குப் போய்க் கொண்டிருந்த மாநிலங்களில் மணிப்பூரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாபில் கிடைத்த அடி

    பஞ்சாபில் கிடைத்த அடி

    ஆனால் பஞ்சாப் மாநில தேர்தலில் பாஜகவுக்கு சற்றே அடி கிடைத்தது. அங்கு அதன் மேஜிக் வெல்ல முடியவில்லை. மாறாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

    நிதிஷ் குமாருடன் பீகாரில்

    நிதிஷ் குமாருடன் பீகாரில்

    பீகாரில் நிதிஷ் குமாருடன் கை கோர்த்த பாஜக அங்கு கூட்டணி ஆட்சியமைத்தது. இதுவும் இந்த ஆண்டில் மக்கள் கண்ட அதிரடித் திருப்பங்களில் ஒன்றாகும்.

    2018ல் பெரிய அறுவடையா

    2018ல் பெரிய அறுவடையா

    தற்போது காங்கிரஸ் கட்சி்யின் ஆட்சிய கர்நாடகா, புதுச்சேரி, மேகாலயா, மிஸோரம் ஆகியவற்றில் மட்டுமே உள்ளது. அடுத்த ஆண்டு கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இவற்றை மொத்தமாக அள்ளும் நோக்கில் பாஜக உள்ளது என்பதால் அடுத்த ஆண்டும் பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது.

    English summary
    Though BJP had a tough time in Gujarat, 2017 was very good year for the ruling party in the centre. It has formed govts in 6 of the 7 states which faced polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X