For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தானே ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து: 5 பேர் பலி, 70 பேர் காயம்

By Siva
Google Oneindia Tamil News

தானே: தானேவில் உள்ள ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்ததில் 5 பேர் பலியாகினர், சுமார் 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Blast at chemical factory in Thane kills 3; 40 injured

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள தோம்பிவாலியில் ஹெர்பரட் பிரவுன்-ஆச்சார்யா ரசாயன ஆலை உள்ளது. அந்த ஆலையில் இன்று காலை 11 மணிக்கு பாய்லர் வெடித்தது. இதையடுத்து ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் பணியாற்றிய 5 பேர் பலியாகினர். மேலும் 70 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Blast at chemical factory in Thane kills 3; 40 injured

இந்த சம்பவம் குறித்து உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் 8 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. இந்த விபத்தில் அப்பகுதியில் இருக்கும் 6 கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன.

Blast at chemical factory in Thane kills 3; 40 injured

காயம் அடைந்தவர்கள் எய்ம்ஸ், ஆர்.ஆர். மருத்துவமனை, சாஸ்திரிநகர் மருத்துவமனை மற்றும் சிவம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரசாயன ஆலை விபத்தால் தோம்பிவ்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Blast at chemical factory in Thane kills 3; 40 injured

சம்பவ நடந்த இடத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் டாக்டர் மகேந்திர கல்யாண்கர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
A boiler blast at a chemical factory in Dombivali (East) in Thane district of Maharashtra claimed lives of three workers and left at least 40 injured on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X