For Daily Alerts
Just In
இந்தியா திரும்பிய கீதா, மஹதோ தம்பதியரின் மகள் அல்ல- மரபணு சோதனையில் முடிவு
டெல்லி : பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தடைந்த கீதாவின் மரபணு சோதனை முடிவுகளில் மஹதோ தம்பதியர் அவருடைய பெற்றோர் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது சிறுவயதில் பெற்றோரைப் பிரிந்து பாகிஸ்தானுக்கு தவறுதலாக ரயில் மூலம் சென்ற காது கேட்காத, வாய் பேச இயலாத இந்தியாவை சேர்ந்த கீதா, பாகிஸ்தானில் ஒரு தொண்டு நிறுவனத்தில் வளர்ந்தார்.

சமீபத்தில் இந்தியா திரும்பிய அவரை தங்கள் மகள் என பீகாரை சேர்ந்த ஜனார்தன் மஹதோ என்பவர் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் இவர்களிடம் நடத்தப்பட்ட மரபணு சோதனையின் முடிவில் மஹதோ தம்பதியருக்கு கீதா பிறக்கவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.