For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எம்.எஸ். மூலம் விரும்பிய உணவு பெறும் திட்டம் - இன்று முதல் 6 ரயில்களில் அமல்

Google Oneindia Tamil News

டெல்லி: ரயில் பயணிகள் எஸ்எம்எஸ் அனுப்பி விரும்பிய உணவை வாங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சோதனை ரீதியில் இத்திட்டம் சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே செயல்படுத்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த எஸ்.எம்.எஸ். மூலம் உணவு பெறும் திட்டத்தை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் மட்டுமே பெற முடியும் என ரயில்வே உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கென பிரத்யேகமாக தொலைபேசி எண் ஒன்றும் ஒதுக்கப் பட்டுள்ளது.

பிரபல உணவு நிறுவனங்களுடன் ரயில்வே நிர்வாகம் கூட்டு சேர்ந்து இவ்வாறு ஆர்டர் செய்யப்படும் உணவு உரிய காலத்தில் பயணிகளுக்கு வழக்கப்பட உள்ளது.

எஸ்.எம்.எஸ்....

எஸ்.எம்.எஸ்....

இப்புதிய எஸ்.எம்.எஸ். மூலம் உணவு ஆர்டர் செய்ய விரும்பும் பயணிகள் தங்களது பி.என்.ஆர். எண்ணையும், அத்துடன் தங்களுக்கு விருப்பமான உணாவின் பெயரையும் டைப் செய்து 139 என்ரா எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

போன் வரும்...

போன் வரும்...

அதனைத் தொடர்ந்து பயணியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வருமாம். அதில், பி.என்.ஆர். எண் மற்றும் இருக்கை எண் போன்ற விவரங்கள் சரிபார்க்கப் படும்.

கையில காசு... வாயில தோசை

கையில காசு... வாயில தோசை

இந்த சரிபார்ப்புக்கு பின்னர் அடுத்து வரும் ரயில் நிலையத்தில் பயணி கேட்ட விருப்பமான உணவு அவருக்கு பணியாளர்கள் மூலம் அனுப்பி வைக்கப் படும். அப்போது பணியாளர்களிடம் தங்களது உணவுக்கான கட்டணத்தை பயணிகள் வழங்கினால் போதுமானது.

6 ரயில்களில்...

6 ரயில்களில்...

இத்திட்டம் முதல்கட்டமாக டெல்லி -பதான்கோட் விரைவு ரயில், கதிஹார் - அமிர்தசரஸ் விரைவு ரயில், அமிர்தசரஸ் - லோகமான்ய திலக் டெர்மினஸ் விரைவு ரயில், ஷானி பஞ்சாப் விரைவு ரயில் டெல்லி - அமிர்தசரஸ் விரைவு ரயில், ஷாஹித் விரைவு ரயில் என மொத்தம் 6 ரயில்களில் தொடங்கப் பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்...

தொலைபேசி எண்கள்...

இது தவிர 18001034139 அல்லது 0120 - 4383892-99ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டும் ரயில்களில் விருப்பமான உணவைப் பெறலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைனில் மூலமாக....

ஆன்லைனில் மூலமாக....

இத்திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அடுத்தகட்டமாக இணையதளம் வாயிலாக ரயிலில் இருந்தபடியே உணவு ஆர்டர் செய்யும் முறையை அமல் படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

English summary
Now railway passengers can book meals through SMS to 139 as the service will be launched from Thursday on a few selected trains on trial basis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X