For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் குவிந்த மக்கள்.. திருவிழா போல காட்சியளித்த வாகா.. ஹீரோ அபிநந்தனை வரவேற்ற கூட்டம்!

இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க பாகிஸ்தான் எல்லையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

அமிர்தசரஸ்: இந்திய விமானி அபிநந்தனை வரவேற்க பாகிஸ்தான் எல்லையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் குவிந்து இருந்தனர். கரகோஷம் எழுப்பி அவர்கள் அபிநந்தனை வரவேற்றனர்.

இன்று மாலை, பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். நேற்று முதல்நாள் விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

மோடிக்கு ராணுவம் முக்கியமா? தேர்தல் முக்கியமா? இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் டிரெண்ட்! மோடிக்கு ராணுவம் முக்கியமா? தேர்தல் முக்கியமா? இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் டிரெண்ட்!

இதையடுத்து நேற்று இவரை விடுவிக்க போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார். பலத்த பாதுகாப்புடன் அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

மக்கள் குவிந்தனர்

மக்கள் குவிந்தனர்

இன்று வாகா எல்லையில் விமானி அபிநந்தனை வரவேற்க மக்கள் குவிந்தனர். திருவிழா கூட்டம் போல வாகா எல்லையில் மக்கள் அதிக எண்ணிக்கையில்கூடினார்கள். சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என்று பலர் வாகா எல்லையை நோக்கி சென்றனர்.

அந்த பக்கமும் இருக்கிறார்கள்

அந்த பக்கமும் இருக்கிறார்கள்

இந்தியர்கள் மட்டுமில்லாமல் பாகிஸ்தான் பக்கத்திலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர். அபிநந்தனை விடுவிப்பதை பார்ப்பதற்காக இவர்கள் அங்கு சென்று இருந்தனர். இதனால் அந்த பகுதி எப்போதும் இல்லாத அளவிற்கு அதிக மக்களால் நிரம்பி காணப்பட்டது.

பாதுகாப்பு அதிகரிப்பு

பாதுகாப்பு அதிகரிப்பு

அதேபோல் வாகா எல்லையில் இதனால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. அங்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்ததால் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. கண்காணிப்பு கோபுரங்களில் ராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டர். அதேபோல் டிரோன் கேமரா மூலமும் கண்காணிப்பு நடந்து வந்தது.

இம்ரான் கானிடம் பாடம் கற்க வேண்டும்.. குஷ்பு அதிரடி டிவீட்.. கிளம்பியது சூடான விவாதம் இம்ரான் கானிடம் பாடம் கற்க வேண்டும்.. குஷ்பு அதிரடி டிவீட்.. கிளம்பியது சூடான விவாதம்

சம்பிரதாயம்

சம்பிரதாயம்

பொதுவாக வாகா பார்டரில் மாலை நேரங்களில் எல்லைக் கதவுகள் திறக்கப்படும். இதை காண நூற்றுக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். இந்த நிகழ்வை காண மக்கள் அங்கு குவிந்துள்ளனர். ஆனால் இன்று அப்படி கதவு திறக்கும் சம்பிரதாயங்கள் பாதுகாப்பு கருதி நடத்தப்படவில்லை.

English summary
India and Pakistan, Both countries people have gathered in Wagha border to witness IAF Pilot Abhinandan's homecoming.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X