For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம்.. செய்வதறியாமல் 15 லட்சம் பேர் அஸ்ஸாமில் தவிப்பு

Google Oneindia Tamil News

குவகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி செய்வதறியாது தவிக்கிறார்கள். இதேபோல் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் ஜீவாதார நதியான பிரம்மபுத்ராவில் வரலாறு காணாத வெள்ளம் பாயந்தோடுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்தனர். 15 லட்சம் பேர் என்ன செய்து என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

 Brahmaputra floods danger in assam after heavy rain, 15 Lakh Affected , 7 died

இதுவரை 20 ஆயிரம் பேர் 68 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் உறைவிட வசதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல லட்சம் பேரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைளை தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் எடுத்து வருகிறார்கள்.

வெள்ளத்தால் வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் மாநிலம் தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பர்பேட்டா என்ற மாவட்டம் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 5லட்சம் பேர் வாழ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மோரன் என்ற மாவட்டத்தில் 52 கிராமங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் அங்கு மொத்தமாக வீடுகளை விட்டு வெளியேவிட்டனர்.

 Brahmaputra floods danger in assam after heavy rain, 15 Lakh Affected , 7 died

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 10 நதிகளின் நீர் மட்டமும் அதிகமாக உயர்ந்து உள்ளது. இதனால் தேமாஜி, லகீம்பூர் உள்ளளிட்ட பகுதிகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜிராங்கா தேசிய பூங்காவில் 70 சதவீத பகுதிகள் நீரில் மூழ்கி கிடக்கின்றனர். வனவிலங்குகள் ஷெட்டர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் காலமானார் வங்கதேச முன்னாள் அதிபர் ஹூசைன் முகமது எர்ஷாத் காலமானார்

27 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் இதுவரை அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ளத்தால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாம் மாநிலத்தின் வெள்ளத்தால் பேரிடர் ஏற்பட்டுள்ளதால் அந்த மாநில சுகாதாரத்துறை ஊழியர்கள் செப்டம்பர் வரை விடுமறை எடுக்க வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் மேகாலயா உள்பட அஸ்ஸாமின் அண்டை மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருப்பதால் வெள்ளத்தின் பாதிப்பு மிக அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறார்கள்.

English summary
Brahmaputra floods danger in assam after heavy rain, floods affecting 15 lakh people across 25 districts in the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X