For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேமிங் கோட்.. பேஸ்புக் கணக்கு.. பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானுக்கு அளித்த உளவாளி.. திடுக் பின்னணி!

பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி எப்படி பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானிற்கு அளித்தான் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி எப்படி பிரமோஸ் விவரங்களை பாகிஸ்தானிற்கு அளித்தான் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

கேம் விளையாடும் கோட்கள் மூலம் இந்த தகவல்கள் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் பேஸ்புக்கில் இதற்காக பல போலி கணக்குகளும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் இவன் எப்படி கைது செய்யப்பட்டான் என்று தீவிரவாதி எதிர்ப்பு படை விவரங்களை வெளியிட்டு இருக்கிறது. இவனை பாதுகாப்பு படையினர் பொறிவைத்து பிடித்து இருக்கிறார்கள்.

[ சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றச்சாட்டு.. மலேசியாவில் 126 வெளிநாட்டு தொழிலாளர்கள் கைது ]

 கைது செய்யப்பட்டான்

கைது செய்யப்பட்டான்

பிரமோஸ் குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டு
இருக்கிறான். இவன் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இயங்கி வந்த டிஆர்டிஓவின் பிரமோஸ் குழுவில் பணியாற்றி வந்துள்ளான். இவன் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பை சேர்ந்தவன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிஷாந்த் அகர்வால் என்று இவன் தன்னுடைய பெயரை அளித்துள்ளான்.

எப்படி பிடித்தனர் இவனை

எப்படி பிடித்தனர் இவனை

கடந்த சில மாதங்களுக்கு முன் அச்சுதானந்த் மிஸ்ரா என்ற பாதுகாப்பு படை அதிகாரி கைது செய்யப்பட்டான். இவன் பாகிஸ்தான் உளவாளி என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இவன் கொடுத்த வாக்குமூலத்தை வைத்தே பிரமோஸில் பணியாற்றிய இன்னொரு உளவாளியான நிஷாந்த் அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளான்.

எப்படி அளித்தான்

எப்படி அளித்தான்

இவன் ஆன்லைன் கேம்கள் மூலம் திருடப்பட்ட தகவல்களை அளித்துள்ளான். ஆம், ஆன்லைன் கேம் ஒன்றில் (இதன் விவரம் வெளியாகவில்லை) கோட்களை மறைத்து என்கிரிப்ட் செய்து அதை அனுப்பி உள்ளான். பாகிஸ்தானில் ஐஎஸ்ஐ அமைப்பு அந்த கோட்களை டி-கிரிப்ட் செய்து பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கில்லாடி

கில்லாடி

இவன் மஹாராஷ்டிராவை சேர்ந்தவன் என்று தன்னுடைய விவரங்களை அளித்து இருக்கிறான். இவன் படித்த கல்லூரி, ஊர், விவரம் என அனைத்தும் பொய்யானது என்ற கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இவன் நான்கு வருடமாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். நான்கு வருடமாக சிறிய சிறிய விஷயங்களை கூட இவன் தனது உளவு படையான ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.

பேஸ்புக் பொய் கணக்கு

பேஸ்புக் பொய் கணக்கு

அதேபோல் இவன் பேஸ்புக்கிலும் பொய்யான கணக்குகள் இரண்டு வைத்துள்ளான். இதை வைத்து மற்ற பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரமோஸில் வேலை பார்ப்பதாக கூறி பேசி வந்துள்ளான். அவர்களிடமும் சில முக்கியமான தகவல்களை இவன் கறந்து பாகிஸ்தானிற்கு அனுப்பி இருக்கிறான்.

English summary
BrahMos: Gaming codes were used to send seeker technology of the missile.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X