For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜஸ்தானில் பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை 50வது முறையாக வெற்றி

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது. கப்பலில் இருந்து எதிரிகளின் நிலப்பகுதியின் இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

இந்தியாவின் பிரம்மாஸ்திரம் ஆன பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை 50 வது முறையாக இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

BrahMos land-attack missile strikes it big during launch No. 50

290 கிலோ மீட்டர் தூரம் வரை, சுமார் 300 கிலோ அணு ஆயுதங்களை ஏந்தி செல்லும் வல்லமை வாய்ந்த பிரமோஸ் ஏவுகணைகள் ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் சிறப்புடையதாகும்.

எதிரி ஏவுகணைகளை ஏமாற்றி தனது நிலையை மாற்றிச்சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றதாகும். இந்த ஏவுகணை அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி தொழில்நுட்பத் தகவல்களை பெறக்கூடிய திறமை பெற்றதாகும்.

கடல் மட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் உள்ள சிறிய இலக்கைக்கூட மிக துல்லியமாக தாக்கி அழிக்ககூடிய வல்லமை பெற்றது. பிரமோஸ் வகை ஏவுகணை 2005ம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
India's Brahmastra - BrahMos supersonic cruise missile - hit the designated target successfully during a test-firing conducted by the Indian Army today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X