For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் பதற்றம்...சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை... இன்று வெற்றிகரமாக சோதனை!!

Google Oneindia Tamil News

பாலசோர்: தாக்குதல் தூரம் நீட்டிக்கப்பட்ட சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணை இன்று பாலசோரில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 450 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கையும் அழிக்கும் திறன் கொண்டது.

ஒடிசாவில் இருக்கும் பாலசோர் என்ற இடத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா, ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த ஏவுகணை 290 கி. மீட்டர் தூரத்திற்கு சென்று இலக்கை நோக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை ஏற்கனவே லடாக் மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

BrahMos missile: India successfully tests extended range today at Balasore

ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் சென்று தாக்கும் திறன் படைத்தது இந்த ஏவுகணை. தற்போது இந்த ஏவுகணை 450 கி. மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கையும் அழிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனம் நீட்டித்துள்ளது. இதற்கான கருவிகளை இந்த நிறுவனமே தயாரித்து பொருத்தியுள்ளது. இது உள்நாட்டு தயாரிப்பு பூஸ்டர் மூலம் செலுத்தப்பட்டது.

இதுகுறித்து இந்திய பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி கூறுகையில், ''இன்றைய வெற்றிக்கு காரணமாக இருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்த ஏவுகணையில் மேலும் சில உள்நாட்டு தயாரிப்பு கருவிகளை சேர்ப்பதற்கு இந்த வெற்றி உந்துதலாக இருக்கும்'' என்று தெரிவித்தார்.

வாழைப்பழத்தை வாங்கி குரங்கு மாதிரி சாப்பிடக் கூடாது.. இந்தா இப்படிச் சாப்பிடணும்...! வாழைப்பழத்தை வாங்கி குரங்கு மாதிரி சாப்பிடக் கூடாது.. இந்தா இப்படிச் சாப்பிடணும்...!

இதற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ''ஆத்மநிர்பர் பாரத் திட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

ஐஎன்எஸ் ராஜ்புத் போர் கப்பலில் 2005ல் இந்த ஏவுகணை பொருத்தப்பட்டு முதலில் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது, 270 கி. மீட்டர் தொலைவில் இருக்கும் இலக்கை மட்டுமே அழிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. தற்போது இரண்டாவது முறையாக இந்த ஏவுகணை சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை கப்பல், விமானம், நீர் மூழ்கி கப்பல்கள் என்று அனைத்திலும் பொருத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BrahMos missile: India successfully tests extended range today at Balasore
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X