டெல்லி: கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் போது அரசியல் கட்சித் தலைவர்கள் காஷ்மீர் வருவது உகந்ததல்ல என்றும் இது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும் காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காஷ்மீர் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் காஷ்மீருக்கு சென்றனர். ஆனால் அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி டெல்லிக்கு திரும்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 12 பேர் இன்று ஸ்ரீநகருக்கு சென்றுள்ளனர். 12 பேர் கொண்ட குழுவில் குலாம்நபி ஆசாத், ராகுல்காந்தி, ஆனந்த சர்மா, திருச்சி சிவா, சீதாராம் யெச்சூரி, தினேஷ் திரிவேதி, டி ராஜா உள்ளிட்டோர் புறப்பட்டனர்.
Newest FirstOldest First
12:13 PM, 24 Aug
அரசியல் தலைவர்கள் காஷ்மீருக்கு வந்தால் அமைதி பங்கம் ஏற்படும்- காஷ்மீர் அரசு
கட்டுப்பாடுகள் அமலில் உள்ளபோது தலைவர்கள் இங்கு வருவது உகந்ததல்ல
பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளிடம் இருந்து மக்கள் காக்கப்படுவர்
காஷ்மீரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்
11:57 AM, 24 Aug
ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட நிலையில் ஸ்ரீநகர் செல்லும் எதிர்க்கட்சியினர்