For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக எனும் கப்பல் ஆர் எஸ் எஸ் இயக்கத்தால் மூழ்குகிறது : ராகுல் பொளேர்

பாஜக எனும் கப்பல் ஆர் எஸ் எஸ் அமைப்பால் நீரில் மூழ்கி வருகிறது என்று ராகுல் காந்தி விமர்சனம்செய்துள்ளார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா- வீடியோ

    டெல்லி : பாஜக எனும் கப்பல் ஆர் எஸ் எஸ் அமைப்பால் நீரில் மூழ்கி வருகிறது. அதில் இருந்து திறமையானவர்கள் வெளியேறி தப்பித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

    மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தனக்கு வருத்தத்தை தருவதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேஸ்புக்கில் கருத்து தெரிவித்து இருந்தார்.

    Brighest flee in the Sinking Ship Rahul Comment on BJP

    இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தற்போது ஓய்வில் இருக்கும் நமது நிதியமைச்சர் வீட்டில் இருந்தபடியே பிரேக்கிங் செய்திகளை கொடுத்து வருகிறார்.

    இந்திய பொருளாதாரத்தின் சாவியை பாஜக பொருளாளர் வைத்திருக்கிறார். நாட்டில் என்ன நடக்கிறது என்றே மக்களுக்குத் தெரியவில்லை. பாஜக எனும் கப்பல் வேகமாக மூழ்கி வருகிறது.

    அதில் இருந்து திறமையானவர்கள் தப்பித்து வருகிறார்கள். ஆர் எஸ் எஸ் அமைப்பின் கையில் இருக்கும் பாஜக எனும் கப்பல், விரைவில் பாறைகளில் மோதி உடையப்போகிறது. அதன் கேப்டன் மோடியோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Brighest flee in the Sinking Ship Rahul Comment on BJP. Earlier Chief Economical Advisor Aravind Subramaniyan resigned his post and it made various comments on Social Media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X