For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா வருகிறார் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ்.... மியான்மர் பயணம் திடீர் ரத்து!

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் இந்த மாத இறுதியில் மியான்மர் தவிர்த்து மற்ற அனைத்து ஆசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் இம் மாத இறுதியில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத் திட்டத்தில் இருந்து தற்போது திடீரென மியான்மர் நீக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நடக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. தன் மனைவியுடன் ஆசியாவின் அனைத்து நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டிருக்கும் இளவரசர் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், ரோஹிங்கியா மக்களின் பிரச்சனையைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளார்.

Britain’s Prince Charles will tour to india by this month !

மியான்மரில் நடந்து வரும் தொடர் வன்முறைகள் காரணமாக 5,00,000க்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 10,000 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். இந்த பிரச்சனை முடிவடையாத காரணத்தால் கடைசி நேரத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் இளவரசர், பிரதமர் மோடியை இம் மாத இறுதியில் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சார்ல்ஸ் 11 நாட்கள் தங்கி இருப்பார்.

English summary
England Prince Charles will tour India and some other south Asian countries by this month, but he decided that he will not visit Myanmar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X