For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகிலேயே முதல்முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானம்- பிரிட்டிஷ் ஏர்வேஸ்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உலகிலேயே முதல் முறையாக டெல்லி மார்க்கத்தில் நவீன சூப்பர் ஜம்போ போயிங் விமானத்தை இயக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் திட்டமிட்டுள்ளது.

உலக அளவில் பிரபலமானது போயிங் விமான தயாரிப்பு நிறுவனம். ட்ரீம்லைனர் வரிசையில் லேட்டஸ்ட் விமானமாக போயிங் 787-9 அறிமுகமாகியுள்ளது.

டெல்லிக்கு.,...

டெல்லிக்கு.,...

இந்தியாவில் 90 ஆண்டுகளுக்கும் மேலாக விமான சேவையை வழங்கி வரும் 'பிரிட்டிஷ் ஏர்வேஸ்' நிறுவனம் உலகிலேயே முதல்முறையாக லண்டனில் இருந்து டெல்லிக்கு இந்த புதிய விமானத்தை இயக்குகிறது. இதற்கு அடுத்தபடியாக அபுதாபிக்கு இயக்கப்படுகிறது.

49 விமான சேவைகள்

49 விமான சேவைகள்

தற்போது இந்தியாவில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 49 விமானங்களை இயககி வருகிறது. லண்டன் ஹீத்ரோவில் இருந்து இந்தியாவின் 5 முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்திற்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அக்டோபர் 25 முதல்...

அக்டோபர் 25 முதல்...

தற்போது புதிதாக அறிமுகமாகும் ட்ரீம்லைனர் 787-9 விமான சேவையை வரும் அக்டோபர் 25-ந்தேதி முதல் துவங்குகிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ். 8 சீட்டுகள் வரிசை கொண்ட புதிய முதல் வகுப்பு கேபின்களை கொண்டது இந்த புதிய விமானம்.

18 புதிய விமானங்கள்

18 புதிய விமானங்கள்

ஏர்பஸ் ஏ-380 எஸ், போயிங் 787-8 எஸ், 787-9 எஸ், 787-10 எஸ் ஆகிய புதிய சூப்பர் ஜம்போ விமானங்களை அதிக அளவில் இயக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் முடிவு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக 747- வரிசை விமானங்களில் 18 விமானங்களை புதுப்பிக்கும் பணியில் களமிறங்கியுள்ளது பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம். புதிய ரக விமானங்களை அதிக அளவில இயக்கவும் திட்டமிட்டுள்ளது.

English summary
British Airways today announced to operate Boeing 787-900 aircraft in the Delhi-London sector starting October 25, 2015, making it the first operator to launch Boeing 787-900 operations in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X