For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்: ஷிமோகாவில் எடியூரப்பா போட்டி

By Mayura Akilan
|

டெல்லி: கர்நாடக மாநில முன்னாள் முதல் எடியூரப்பா ஷிமோகா தொகுதியில் போட்டியிடுவார் என பாஜக அறிவித்துள்ளது.

பாஜகவின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் நரேந்திர மோடி, ராஜ் நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

yeddyurappa

இந்தக் கூட்டத்தில் பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் அனந்த குமார், 52 பேர் வேட்பாளர்களை கொண்ட பட்டியலை வெளியிட்டார்.

இந்த பட்டியலில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பேரும் இடம்பெற்றுள்ளது. இவர் ஷிமோகா தொகுதியில் போட்டியிடுகிறார். பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக பொதுச்செயலாளர் அனந்தகுமார் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். மேற்குவங்க மாநிலம் ஹூக்ளியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தன்மித்ரா போட்டியிடுகிறார் என ஆனந்தகுமார் தெரிவித்தார்

மேலும் மத்திய தேர்தல் குழு கூட்டத்திற்கு பின் 3ஆவது வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 13 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Former Karnataka Chief Minister B S Yeddyurappa, who had to quit the BJP in the wake of corruption charges and rejoined recently, is among the 52 candidates finalised by the party today for the upcoming Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X